11th Agricultural Census Preliminary Training: Conducted at Perambalur under the leadership of DRO!

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் 11-வது வேளாண்மை கணக்கெடுப்பு (2021-22) முதற்கட்ட பயிற்சி டி.ஆர்.ஊ அங்கையற்கண்ணி தலைமையில் 30.08.2022 அன்று நடந்தது.

கணக்கெடுப்பு பயிற்சி புள்ளிஇயல் துணை இயக்குநர் திருவேங்கடம் வழங்கினார். கணக்கெடுப்பாளர்களாக உள்ள கிராம நிர்வாக அலுவலர்களுக்கு மாவட்டத்தில் உள்ள புள்ளிஇயல் ஆய்வாளர்களால் பயிற்சி வழங்கப்படும். இது குறித்து மேலும் தெரிவித்ததாவது:

மாவட்ட அளவிலும் வட்ட அளவிலும் வேளாண்மை கணக்கெடுப்பு எவ்வாறு மேற்கொள்ள வேண்டும் என்பது பற்றி இப்பயிற்சியில் தெளிவாக விளக்கப்பட்டது. இந்த கணக்கெடுப்பு 5 ஆண்டுக்கு ஒரு முறை மத்திய அரசின் வேளாண்மை மற்றும் உழவர் நலத் துறை அமைச்சகத்தால் மேற்கொள்ளப்படுகிறது.

2020- 21 -ல் 11-வது கணக்கெடுப்பு நடந்திருக்க வேண்டும் கொரோனா தொற்று பரவல் காரணமாக இப்போது நடக்கிறது. மாவட்ட அளவில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் மாவட்ட வருவாய் அலுவலர் வேளாண்மை கணக்கெடுப்பு அலுவலராகவும், வட்டாட்சியர் வட்ட அளவில் வேளாண்மை கணக்கெடுப்பு அலுவலராகவும் இருப்பார்கள்.

விவசாயம் எந்த அளவில் நடக்கிறது, விவசாயத்தில் நேரடியாக எத்தனை பேர் ஈடுபட்டுள்ளனர், குத்தகை விவசாயத்தில் எவ்வளவு பேர் ஈடுபட்டுள்ளனர், பரப்பளவில் அடிப்படையில் சிறு குறு நடுத்தர மற்றும் பெரிய விவசாயிகள் ஆண் பெண் வாரியாகவும், சமூக அடிப்படையில் கணக்கெடுப்பு நடக்கும்.

வேளாண்மை கணக்கெடுப்பு எப்படி எவ்வாறு மேற்கொள்ள வேண்டும் என்று கணக்கெடுப்பாளர்களாக உள்ள கிராம நிர்வாக அலுவலர்களுக்கு அறிவுரைகளை வழங்கி அரசு விதித்துள்ள விதிகளின்படி கணக்கெடுப்பு பணிகள் முறையாக நடைபெற தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

இந்த ஆண்டு முதல் நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தி டிஜிட்டல் முறையில் கணக்கெடுப்பு பணிகள் நடைபெறும். இக்கணக்கெடுப்பின் அடிப்படையில் தான் இனி வரும் காலங்களில் விவசாயிகளுக்கான வளர்ச்சித் திட்டங்கள் வகுக்கப்படும். இப்போது மாவட்டம் மற்றும் வட்ட அளவிலான பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகிறது. செப்டம்பர் முதல் வாரத்தில் மேலாண்மை கணக்கெடுப்பு பணி தொடங்கும், என தெரிவித்தர்.

இப்பயிற்சியில் வருவாய் கோட்டாட்சியர், 4 வட்டாட்சியர்கள் மற்றும் புள்ளிஇயல் துறை அலுவலர்கள் கலந்து கொண்டு பயிற்சி பெற்றனர்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!