இயக்குனர் ராஜமௌலி இயக்கத்தில் பிரபாஸ், ராணா, அனுஷ்கா, நாசர்,சத்யராஜ் நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட்டான திரைப்படம் பாகுபலி. இதில் இரண்டாம் பாகம் எடுக்கப்பட்ட பாகுபலி-2, வசூலில் 2 ஆயிரம் கோடியை நெருங்கியுள்ளது. கடந்த ஆண்டு 2017 ல் வெளியான இப்படம் இதுவரை 1,700 கோடி ரூபாய் உலக அளவில் வசூலித்துள்ளது. சில வாரங்களுக்கு முன்னர் சீனா வில் ரிலீசான இப்படம், ரிலீஸ் செய்யப்பட்ட 7 ஆயிரம் திரையரங்குகளிலும் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இதே நிலை தொடர்ந்தால் இன்னும் சில தினங்களில் 300 கோடி வசூலித்து உலக அளவில் 2 ஆயிரம் கோடி வசூல் செய்த முதல் இந்திய படம் என்ற பெருமயை இப்படம் பெரும்.