2 cell phones including Rs 1 lakh cash stolen from 5 temples near Perambalur, police investigating!
பெரம்பலூர் மாவட்டம் நாவலூர் கிராமத்தில் மாரியம்மன், செல்லியம்மன் முருகன், விநாயகர் ஆகிய 4 கோவில் உள்ளது, இதில் நேற்று காலை கோயில் அருகே இருந்த பொதுமக்கள் பார்த்த போது கோவிலில் உண்டியல் உடைக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது, மேலும் முருகன் கோவில் சபரிமலை ஐயப்பனுக்கு மாலையிட்ட பக்தர்கள் இரவு படுத்து உறங்கி இருந்த போது அவர்கள் வைத்திருந்த 2 செல் போன்களை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்தது மேலும் இதே போன்று திருப்பெயர் கிராமத்தில் உள்ள முருகன் கோவிலில் உள்ள உண்டியலை உடைத்து மர்ம நபர்கள் பணத்தை திருடிச் சென்றுள்ளதும் தெரிய வந்தது,
மேலும், ஒரே இரவில் இரண்டு கிராமங்களில் உள்ள ஐந்து கோவில்களில் உள்ள உண்டியலை உடைத்து ரூபாய் 1 லட்சத்திற்க்கு மேல் பணம் மற்றும் ஐயப்ப பக்தர்களின் இரண்டு செல்போன்கள்,ஆகியவை திருடி சென்ற சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது இது குறித்து தகவல் இருந்த பெரம்பலூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட நபர் யார் என்பது குறித்தும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதனால் அப்பகுதி இரண்டு கிராம மக்கள் மிகுந்த அச்சம் அடைந்துள்ளனர். அருகே இருந்த சிசிடிவி கேமராவில் 2 நபர்கள் மோட்டார் சைக்கிளில் வந்து உண்டியலை திருடி செல்லும் காட்சி பதிவாகி உள்ளது. இதை வைத்து போலீசார் திருடர்களை தேடி வருகின்றனர்.