Motivational training for Anganwadi workers was conducted at Perambalur.
தமிழக அரசு அலுவலர்களுக்கு அண்ணா நிர்வாக பணியாளர் கல்லூரி மூலமாக திறன் மேம்பாட்டு பயிற்சிகள், பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள 50 அங்கன்வாடி பணியாளர்களுக்கு 2 நாட்கள் பெரம்பலூர் மாவட்ட ஆட்சியரக கூட்ட அரங்கத்தில் நடைபெற்றது.
உடல்நலம், ஊட்டச்சத்து மற்றும் சுகாதாரமான உணவுகள் குறித்தும், மனித உறவுகள் மேம்பாடு குறித்தும், மனநலம் மற்றும் மன அழுத்தம் போக்குதல் குறித்தும், குழு உணர்வு மேம்பாடு குறித்தும், தகவல் தொடர்பு கலை உள்ளிட்ட பல்வேறு தலைப்புகள் குறித்து பயிற்சி வழங்கப்பட்டது.
இப்பயிற்சி நிறைவு நாளில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் ஆர். சுகந்தி கலந்து கொண்டு பயிற்சி நிறைவுரையாற்றி சான்றிதழ்கள் வழங்கி சிறப்பித்தார். பயிற்சியின் போது திருச்சி மண்டல மைய துணை ஆட்சியர் / இளநிலை நிர்வாக அலுவலர் ந. சக்திவேல் பயிற்சி நடவடிக்கைகளை மேலாய்வு செய்தார். இப்பயிற்சிக்கு தேவையான வசதிகளை திருச்சி மண்டல அண்ணா நிர்வாக பணியாளர் கல்லூரி சேர்ந்த உதவி கணக்கு அலுவலர் எஸ். சதீஷ்குமார் உள்ளிட்ட அலுவலர்கள் மேற்கொண்டனர்.