2 lakh acres of maize crops saved due to Nivar storm: Perambalur district farmers happy!

File copy

பெரம்பலூர் மாவட்டத்திற்கும் நிவர் புயல் வீசினால், காற்றும், அதீத கன மழையும் என்று வானிலை மையம் அறிவிப்பு விடுத்திருந்தது. இதனால் பெரம்பலூர் மாவட்டத்தில் மக்காச்சோளம் பயிரிட்டருந்த விவசாயிகள், விளைந்து நிற்கும் மக்காச் சோள கதிர்கள் புயல் காற்றால் வீழ்ந்து, உழைப்பு வீணாகி விடுமோ என்ற அச்சத்தில் விவசாயிகள் இருந்த நிலையில், நிவர் பெரம்பலூர் மாவட்டத்தில் எவ்வித பெரிய பாதிப்பும் நகர்ந்து சென்றுவிட்டதால் இன்று காலை முதல் பெரும் மகிழ்ச்சி அடைந்தனர். பெரம்பலூர் மாவட்டத்தில் பருத்தி மக்காச்சோளப் சாகுபடி 85 ஆயிரத்து 455 எக்டேரில் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.

ஆனால், பெரம்பலூர் மாவட்டத்திற்கு அதிபடியான மழையை வடகிழக்குப் பருவமழையும், புயல்களே வழங்கி வரும். இந்த ஆண்டு அரும்பாவூரில் உள்ள சில ஏரிகள் நிரம்பினாலும், எசனை உள்ளிட்ட பல்வேறு ஏரிகள் முறையான நீர் வரத்து வாய்க்கால்கள் சீரமைக்கப்படாததால் தண்ணீரே இல்லாமல் வறண்டு கிடக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!