4 robbers near Namakkal arrested 25 pounds gold jewelry and car seized

நாமக்கல் நகரில் பல்வேறு திருட்டு, வழிப்பறி வழக்கில் தொடர்புடைய நான்கு பேரை போலீசார் கைது செய்து 25 பவுன் நகை மற்றும் காரை பறிமுதல் செய்தனர்.

நாமக்கல் அடுத்த, ஏளூர் பெரும்பாலிபட்டி பாலி அருகே, கணவன், மனைவி நடந்து சென்றனர். அப்போது, அவ்வழியாக காரில் வந்த நான்கு பேர் அவர்களை வழிமறித்தனர். கத்தியைக்காட்டி மிரட்டி அவர்களிடம் இருந்து ரூ.1,500ஐ பறித்துச் சென்றனர். புதுச்சத்திரம் போலீசார் இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இந்நிலையில் புதுச்சத்திரம் போலீசார் சம்பவத்தன்று மாலை, வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக வந்த ஒரு காரை நிறுத்தி விசாரனை செய்தனர். போலீசாரைக் கண்டதும் காரில் இருந்து 4 பேர் தப்பி ஓட முயன்றனர். போலீசார் அவர்களை மடக்கிப் பிடித்து விசாரணை செய்தனர். அப்போது அவர்கள் கிருஷ்ணகிரியை சேர்ந்த வைரமுத்து (23), சேகர் (32), வெங்கடேசன் (40), சிவன் (32) என்பது தெரியவந்தது.

கொள்ளையர்கள் நால்வரும், நாமக்கல் மாவட்டத்தில் திருட்டு, வழிப்பறி சம்பவங்களில் ஈடுபட்டதும், அவர்கள் மீது ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களில் பல வழக்குகள் நிலுவையில் இருப்பதும் தெரியவந்தது. போலீசார் அவர்கள் 4 பேரையும் கைது செய்து அவர்களிடம் இருந்து 25 பவுன் தங்க நகை மற்றும் காரை பறிமுதல் செய்தனர்.
கொள்ளையர்கள், கடந்த 2017ம் ஆண்டு அக்டோபர் மாதம் பெங்களூர் பொம்மசந்திரா பகுதியில் காரை திருடியுள்ளனர். நாமக்கல் பாச்சல் பகுதியில் நகை பறிக்க முயன்றபோது அப்பெண் சத்தம் போட்டதால் நால்வரும் தப்பி ஓடிவிட்டதாகவும் போலீசார் தெரிவித்தனர்.

Tags:

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2025 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!