8.5 pounds of jewelry stolen by breaking the lock of a house near Perambalur!
பெரம்பலூர் மாவட்டம், குன்னம் அருகே வீட்டின் பூட்டை உடைத்து 8.5 தங்க நகையை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
குன்னம் அருகே உள்ள பரவாய் கிராமத்தை சேர்ந்தவர் கொளஞ்சியப்பன் மனைவி கலைச்செல்வி (35). இவர் கடந்த 2 நாட்களுக்கு முன்பு கள்ளக்குறிச்சி மாவட்டம் வானபுரத்தில் உள்ள தனது தாய் வீட்டிற்கு சென்றுள்ளார். மீண்டும் இன்று காலை தனது ஊருக்கு திரும்பி வந்து வீட்டை பார்த்தபோது வீட்டில் முன் கதவு பூட்டு உடைக்கப்பட்டு கீழே கிடந்தது.
இதை கண்டு அதிர்ச்சி அடைந்த கலைச்செல்வி வீட்டின் உள்ளே சென்று பார்த்த போது பீரோ உடைக்கப்பட்டு துணிமணிகள் மற்றும் பொருட்கள் ஆங்காங்கே சிதறி கிடந்தன. நகைகள் வைத்திருந்த பெட்டியில் செயின் மோதிரம் உள்பட 8.5 பவுன் நகைகள் திருடு போயிருந்தது தெரியவந்தது.
இதுகுறித்து கலைச்செல்வி கொடுத்த புகாரின் வழக்கு பதிவு செய்த, குன்னம் போலீசார் வழக்குப்திவு செய்து, தடய அறிவியல் நிபுணர்கள் உதவியுடன் கொள்ளையர்களை தீவிரமாக தேடிவருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.