A boy was killed in an explosion at Kumbabishekam near Perambalur yesterday: 6 people including temple administrators were arrested!

பெரம்பலூர் அருகே உள்ள அரசலூரில் மாரியம்மன் கோவிலில், திருப்பணிகள் முடிந்து நேற்று கும்பாபிஷேக விழா நடந்தது. விழாவில், கோபுர கலசங்களுக்கு புனித நீர் ஊற்றும் நிகழ்ச்சி நடந்தபோது, வானவெடி மற்றும் அதிர்வேட்டு வெடிகள் வெடிக்கப்பட்டது. அப்போது வெடிக்கப்பட்ட வெடிகளில் ஒன்று சிதறி அங்கு கூடியிருந்த கூட்டத்திற்குள் விழுந்து வெடித்து விபத்து ஏற்பட்டது.

வெடி விபத்தில் அரசலூர் கிராமத்தைச் சேர்ந்த ராஜ்குமார் என்பவரது மகன் லலித் கிஷோர் (வயது 9), ஈச்சங்காடு கிராமத்தை சேர்ந்த புனிதா(32), திருச்சி மாவட்டம் சிக்கதம்பூர் கிராமத்தைச் சேர்ந்த சுரேஷ் (36), ஷோபனாபுரம் கிராமத்தை சேர்ந்த பிரியா (21) ஆகியோர் காயம் அடைந்தனர். அவர்களை மீட்டு சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் கொண்டு போய் அங்கிருந்தவர்கள் சேர்த்தனர்.

சுரேஷ், பிரியா, புனிதா ஆகிய 3 பேருக்கும் லேசான காயம் என்பதால் அங்கேயே டாக்டர்கள் சிகிச்சை அளித்தனர். சிறுவன் லலித் குமாருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டிருந்ததால் முதலுதவி சிகிச்சை அளித்து மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு கொண்டு சென்று சிகிச்சைக்காக சேர்க்கப்பட்ட போது பரிசோதனை செய்த டாக்டர்கள் சிறுவன் லலித் கிஷோர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

வெடி விபத்தில் இறந்த சிறுவன் லலித் கிஷோர் அரசலூர் கிராமத்தில் உள்ள அரசு தொடக்கப் பள்ளியில் 4ம் வகுப்பு படித்து வந்தார். அவரது தங்கை லியானா அதே பள்ளியில் 2ம் வகுப்பு படித்து வருகிறார். அப்பா ராஜ்குமார், அம்மா சுகண்யா இருவரும் விவசாயம் செய்கின்றனர்.

வெடிவிபத்து தொடர்பாக வழக்குப் பதிவு செய்த அரும்பாவூர் போலீசார், முறையான வெடி வெடிப்பதற்கான உரிமம் இல்லாமல் வெடி வெடித்த அதே ஊரைச் சேர்ந்த நீலகண்டன் (27) மணிகண்டன் (34) ஆகிய 2 பேரையும் நேற்று போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து முன் அனுபவம் இல்லாவர்களை வெடி வெடிக்க செய்த கோவில் நிர்வாகிகள் தேவராஜ் (50), கனகராஜ் (48), ராமலிங்கம் (66), கோவிந்தசாமி (42) ஆகிய 4 பேரையும் போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவத்தால் கும்பாபிஷேகம் நடத்திய உற்சாகம் இல்லாமல் கலை இழந்தது.

விளம்பரம்:

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2024 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!