A part-time ration shop near Perambalur, MLA. In the presence of Prabhakaran, Collector Venkatabriya inaugurated!

பெரம்பலூர் அருகே உள்ள வடக்கு மாதவி கிராமம் உள்ளது. எசனை தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தின் கட்டுப்பாட்டில் செயல்பட்டு வரும் வடக்குமாதேவி முழுநேர நியாயவிலை அங்காடியில் 822 குடும்ப அட்டைகள் உள்ளது.

இதனால், வடக்குமாதவி ஊராட்சிக்கு உட்பட்ட ஏரிக்கரையில் வசிக்கும் மக்கள் 2. கி.மீ தூரத்தில் உள்ள வடக்குமாதவி கிராமத்திற்கு சென்று பொருட்களை வாங்கி வருவதில் சிரமம் அடைந்து வந்தனர்.

இதனால், ஏரிக்கரை பகுதியில் ஒரு பகுதிநேர அங்காடி அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று 222 குடும்ப அட்டைதாரர்கள் பயன் பெறும் வகையில், அப்பகுதியில் புதிதாக பகுதிநேர அங்காடி அமைக்கப்பட்டது. அதனை கலெக்டர் வெங்கடபிரியா, பெரம்பலூர் எம்.எல்.ஏ பிரபாகரன் முன்னிலையில் தொடங்கி வைத்தார்.

அப்போது,பெரம்பலூர் ஒன்றியக்குழுத் தலைவர் மீனா அண்ணாதுரை, மாவட்ட வழங்கல் அலுவலர் எஸ்.சங்கர், சரக துணைப் பதிவாளர் த.பாண்டித்துரை, பொது விநியோகத்திட்ட துணைப்பதிவாளர் கே.கே.செல்வராஜ், வடக்குமாதவி ஊராடசித் தலைவர் தங்கராசன் உள்ளிட்ட திமுக பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டனர்


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!