A. Raja M.P., visited the foundation stone laying site for Sipcot factory by Tamil Nadu CM MK Stalin in Perambalur!
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை (திங்கட்கிழமை) சுமார் 12.00, மணியளவில், பெரம்பலூர் மாவட்டம், 36-எறையூர் கிராமத்தில் 250 ஏக்கர் பரப்பளவில் அமையவுள்ள சிப்காட் தொழிற்சாலைக்கு அடிக்கல் நாட்டுகிறார்.
அந்த இடத்தை, முன்னாள் மத்திய அமைச்சரும், திமுக துணை பொதுச்செயலாளருமான ஆ.ராசா. எம்.பி., அங்கு சென்று நடைபெற்று வரும் பணிகளை பார்வையிட்டார். சிப்காட் நிர்வாக இயக்குனர் நிஷாந்த் கிருஷ்ணா, எம்.எல்.ஏ பிரபாகரன், மாவட்ட ஊராட்சி சேர்மன் குன்னம் சி. இராஜேந்திரன், வக்கீல் என். ராஜேந்திரன், மாவட்ட துணைச் செயலாளர் தழுதாழை பாஸ்கர், சன்.சம்பத், மாவட்ட பொருளாளர் செ.ரவிச்சந்திரன், ஒன்றிய செயலாளர்கள் வீ.ஜெகதீசன், தி.மதியழகன், உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.