A social activist provided a surveillance camera at a cost of Rs 1 lakh to prevent the movement of anti-social elements in a government school near Perambalur!

பள்ளி வளாகத்திற்கு, கண்காணிப்பு கேமரா பொருத்தித் தந்த சமூக ஆர்வலர் கலைவேந்தனுக்கு அரசு பள்ளி ஆசிரியர்கள், பொதுமக்கள் பாராட்டி வருகின்றனர்.

பெரம்பலூர் அருகே உள்ள காரை கிராமத்தில் அரசு மேல்நிலைப் பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் காரை, தெரணி, வரகுபாடி, புதுக்குறிச்சி, நாரணமங்கலம் உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த 485 மாணவர்கள் படித்து வருகின்றனர். நல்ல சுற்றுச்சூழலுடன் பராமரிக்கப்பட்டு வரும், இந்த பள்ளியில் பள்ளி முடிந்த பிறகும் விடுமுறை நாட்களிலும், சமூகவிரோதிகள் நுழைந்து மதுஅருந்துவதும், அந்த பாட்டில்களை அங்கேயே போட்டு உடைத்து விட்டுச் செல்வதும் வாடிக்கை.

மறுநாள் காலை இதை வேதனையுடன் அப்புறப்படுத்தி வந்தனர். இதனை தடுக்க வேண்டும் என நினைத்த பள்ளி தலைமை ஆசிரியர் அக்பர்கான் தலைமையிலான ஆசிரியர்கள் காரை பகுதிகளில் சமூகப்பணி செய்துவரும் கலைவேந்தன் என்பவரிடம் தெரிவித்துள்ளனர்.

அதனைத் தொடர்ந்து சமூக ஆர்வலர் கலைவேந்தன் சொந்த செலவில் ரூ.1 லட்சம் மதிப்பில் 6 சிசிடிவி கேமராக்களை பள்ளி வாளகத்தில் அமைத்து கொடுத்துள்ளார். அதன் பிறகு சமூகவிரோதிகள் பள்ளி வளாகத்திற்குள் வருவது அடியோடு தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.

இதனால் காரை மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்களும் மாணவர்களும் நிம்மதியும் மகிழ்சியும் அடைந்துள்ளனர். இது தொடர்பாக சமூக ஆர்வலர் கலைவேந்தனிடம் கேட்டபோது பிற அரசுபள்ளிகளுக்கு உதவி தேவைப்பட்டால் தன்னால் முடிந்ததை செய்து தர தயாராக இருப்பதாகவும், ஏற்கனவே வரகுபாடி கிராமத்தில் மாற்றுத் திறனாளிகள் மற்றும் வறியவர்கள் 10 பேரை தேர்வு செய்து கால்நடைகள் (மாடு) வாங்கி இலவசமாக கொடுத்துள்ளதாகவும் தெரிவித்தார்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!