A spotted deer was killed in a collision with unidentified vehicles in different incidents in Perambalur! Another deer hurt!!

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் மான், மயில், நரி, காட்டுப்பன்றி உள்ளிட்ட ஏராளமான வனவிலங்குகள் வசிக்கிறது. இவைகள் தண்ணீர் மற்றும் உணவு தேடி வனப்பகுதியை விட்டு வெளியே வந்து சாலையை கடக்கும் போது எதிர்பாராதவிதமாக வாகனங்களில் சிக்கி விபத்துக்குள்ளாகியும், ஊருக்குள் வரும்போது தெரு நாய்கள் கடித்து குதறி உயிரிழப்பது வாடிக்கையாக நிகழ்ந்து வருகிறது.

இந்நிலையில், பெரம்பலூர் ஆத்தூர் சாலையில், நேற்று இரவு அடையாளம் தெரியாத வாகனம் மோதி சாலையை கடக்க முயன்ற அழகிய பெண் புள்ளிமான் படுகாயமடைந்து, உயிருக்கு போராடிக் கொண்டிருந்தது. இதனை அவ்வழியே சென்ற வாகன ஓட்டிகள் பார்த்தது வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.

விளம்பரம்:

தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர் அந்த புள்ளி மானை மீட்டு கால்நடை மருத்துவமனைக்கு எடுத்துச் சென்று சிகிச்சை அளித்து, அவர்களது பராமரிப்பில் வைத்திருப்பதோடு, விபத்து நிகழ்ந்த பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமரா காட்சிப் பதிவுகளை கைப்பற்றி, புள்ளிமான் மீது மோதி விபத்து ஏற்படுத்திய வாகனத்தை தீவிரமாக தேடி வருகின்றனர்.

ஆத்தூர் சாலையில் நேற்று இரவு விபத்துக்குள்ளாகி படுகாயமடைந்த மூன்று வயது மதிக்கத்தக்க புள்ளிமானுக்கு மாவட்ட வன அலுவலகத்தில் வனத்துறையினர் கால்நடை மருத்துவர் மூலம் சிகிச்சை அளித்து வருகின்றனர்.

இதனிடையே பெரம்பலூர் கலெக்டர் அலுவலகத்தில் இருந்து தேசிய நெடுஞ்சாலை நோக்கி செல்லும் சாலையில், இன்று காலை அடையாளம் தெரியாத வாகனம் மோதி இரண்டு வயது மதிக்கத்தக்க பெண் புள்ளிமான் ஒன்று உயிரிழந்து விட்டது. அதனை கைப்பற்றி வழக்குப்பதிந்து வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

விளம்பரம்:

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2024 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!