A teenager died on the spot in a collision with unknown vehicle near Perambalur!
பெரம்பலூர் அருகே நேற்றிரவு அடையாளம் தெரியாத வாகனம் மோதிய விபத்தில், பைக்கில் சென்ற வாலிபர் பரிதாபமாக சம்பவ இடத்திலலேயே நடுரோட்டிலேயே துடிதுடித்து உயிரிழந்தார்.
பெரம்பலூர் அருகே உள்ள கோனேரிப்பாளையம் பிரிவு சாலையில், பைக்கில் சென்ற வாலிபர் சாலையில் இறந்து கிடப்பதாக கிடைத்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார், அங்கு வாலிபர் ஒருவர் சடலமாக கிடந்தார். இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார் நடத்திய விசாரணையில், பைக்கில் சென்ற வாலிபர் மீது, அப்பகுதியில் சென்ற அடையாளம் தெரியாத வாகனம் மோதிய விபத்தில் வாலிபர் உயிரிழந்தது தெரியவந்தது. இறந்த வாலிபர், பெரம்பலூர் மாவட்டம், குன்னம் வட்டம், பெருமத்தூரை சேர்ந்த, கோவிந்தன் மகன் அருண் வயது (27), என்பதும், அரணாரையில், சத்தியபாலன் என்பவரிடம் கார் டிரைவராக பணியாற்றி வந்ததும் தெரிய வந்தது. இறந்த அருணின் சடலத்தை மீட்ட போலீசார் உடற்கூறு ஆய்விற்காக, பெரம்பலூர் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மோதி நிற்காமல் சென்ற அடையாளம் தெரியாத வாகனத்தை அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை வைத்து தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர். மேலும், இன்று இரவு அல்லது நாளைக்குள் வாகனத்தை போலீசார் பிடித்து விடுவார்கள் என தெரிய வந்துள்ளது.
ஆத்தூர் சாலையில் அடிக்கடி ஏற்படும் வாகன விபத்து, வாகன ஓட்டிகளை அச்சம் அடைய செய்துள்ளது.