Action has been taken against Omni buses that charged extra: TN Transport Minister Sivashankar informed!

பெரம்பலூர் மாவட்டம், வேப்பூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் ரூ.5.83 கோடி மதிப்பீட்டில் பல்வேறு வளர்ச்சித்திட்ட பணிகளை போக்குவரத்துத்துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர், கலெக்டர் வெங்கடபிரியா முன்னிலையில் இன்று தொடங்கி வைத்த, அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது :

தமிழ்நாடு முதலமைச்சர், பெரம்பலூர் மற்றும் அரியலூர் மாவட்டங்களில் மேற்கொண்ட சுற்றுப் பயணத்தின் போது, பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளை தொடங்கி வைத்ததை தொடர்ந்து, இன்று வேப்பூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பல்வேறு பகுதிகளில், ரூ.5.83 கோடி மதிப்பீட்டில் பல்வேறு வளர்ச்சித்திட்ட பணிகள் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.

கடந்த தீபாவளி பண்டிகை காலத்தில், போக்குவரத்துத்துறை சிறப்பாக செயல்பட்டதென பொதுமக்கள் தமிழக அரசை பாராட்டுக்கின்றனர். ஆம்னி பேருந்து உரிமையாளர்களுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தை இறுதியில், தீபாவளி பண்டிகைக்கு என நிர்ணயிக்கப்பட்ட பேருந்து கட்டணத்தை விட குறைவாக வசூல் செய்யப்படும் என உறுதியளித்தார்கள். அதன்படி தீபாவளி பண்டிகையின்போது புகார்கள் எவ்வித எழாமல் தமிழக அரசு சிறப்பாக செயல்பட்டது. தீபாவளி பண்டிகையின்போது அரசு பேருந்துகளை அதிகளவில் இயக்கி, பொதுமக்களின் பாராட்டை பெற்றது.

இப்பொழுது ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட்டதாக புகார்கள் பெறப்பட்டதன் அடிப்படையில் ஆய்வு மேற்கொண்டதில் 4 பேருந்துகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு, அவர்களிடமிருந்து ரூ.10,000 வரை திரும்ப பெறப்பட்டு, மக்களிடத்தில் வழங்கப்பட்டுள்ளது. எதிர்வரும் புத்தாண்டு பண்டிகை காலத்தின்போதும், பொங்கல் பண்டிகையின்போதும் இவ்வாறு நிகழா வண்ணம் அரசு நடவடிக்கை எடுக்கும் எனத் தெரிவித்தார்.

பெரம்பலூர் மாவட்ட திமுக செயலாளர் குன்னம் சி.ராஜேந்திரன், வேப்பூர் யூனியன் சேர்மன் பிரபா செல்லபிள்ளை, முன்னாள் யூனியன் சேர்மன் அழகு நீலமேகம் உள்ளிட்ட வருவாய், ஊரக வளர்ச்சித்துறை பணியாளர்கள் , திமுக கட்சி பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டனர்.

விளம்பரம்:


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!