Additional commission issue: Officials refuse to bill; Fasting with the ruling party DMK prominent district councilor!

பெரம்பலூர் அருகே உயர்அதிகாரிகளுக்கு பங்கு தர வேண்டும் என கூடுதலாக கமிசனுக்காகவும், முன்பகை காரணமாகவும், ஒப்பந்த பணிகளின் பில்லை நிறுத்தியதால், ஆளும் கட்சியை சேர்ந்த திமுக பிரமுகர் , காவல் துறை முன் அனுமதி பெற்று, மாவட்ட கவுன்சிலர் உண்ணாவிரதம் போராட்டம் நடத்தி வரும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பெரம்பலூர் மாவட்டத்தில், தற்போது, அரசியல்வாதிகளை விட மாவட்ட உயர் அதிகாரிகள் மாவட்டத்தை வளர்ச்சி பாதைக்கு எடுத்து செல்லும் பணிகளில் ஆண்டு ஒன்றுக்கு கோடிக்கணக்கான ரூபாய் கமிசன் பெற்று கருப்பு பணமாக்கி வருகின்றனர்.

இதை அறிந்த அரசியல்வாதிகள் நொந்து போய் உள்ளனர். நாமாவது, தேர்தலில் ஜெயிக்கவும், கூட்டங்களை கூட்டவும் ஏராளமான பணத்தை செலவு செய்கிறோம். ஒன்றுமே செய்யாமல், அரசு அதிகாரிகள் கோடிக்கணக்கில் கொள்ளை அடிப்பதை பார்த்து அசந்து போய் உள்ளனர். இதில் ஆண் அதிகாரிகளை விட பெண்கள் மிகத் திறமையாக காய் நகர்த்துகின்றனர். பணத்தை எப்படி பதுக்கி கருப்பு பணத்தை வெள்ளையாக மாற்றுகின்றனர் என தெரியாமல் வியப்படைந்துள்ளனர்.

இந்நிலையில், பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் ஒன்றியம் புஜங்கராய நல்லூரை சேர்ந்த திமுக பிரமுகர் காட்டுராஜா. இவரது மனைவி அருள்செல்வி மாவட்ட கவுன்சிலராக உள்ளார். ஆலத்தூர் ஒன்றியத்தில் அரசின் திட்டப் பணிகளை ஒப்பந்த அடிப்படையிலும், மாவட்ட கவுன்சிலருக்கான திட்டப் பணிகளையும் செய்து வந்துள்ளார். கூடலூர் கிராமத்தில் ஜல்ஜீவன் திட்டத்தில், பணிகளை முடித்து கொடுத்து பின்னரும், பணிக்கான தொகையை வழங்காமல் பிடிஓ முரளிதரன், ஷோனல் பிடிஓ செல்வமணி உள்ளிட்டோர் அலைக்கழித்து வந்துள்ளனர். மேலும், மாவட்டத்தில் உள்ள உயர்அதிகாரிகள் மற்றும் மேலிடங்களுக்கு கட்டிங் கொடுக்க வேண்டும் என்பதால் கூடுதலாக கேட்டு தொல்லை கொடுத்தாகவும், அரசு அதிகாரி எங்களை ஒன்றும் செய்ய முடியாது என்றும் தெரிவித்ததால், வெறுத்துப் போன காட்டுராஜா நேற்று பாடாலூர் போலீசில் அனுமதி பெற்று, இன்று காலை ஆலத்தூர் யூனியன் அலுவலகத்தில் தனது மனைவியும், மாவட்ட கவுன்சிலரான அருள்செல்வியுடன் , அதிகாரிகளை கண்டித்து உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டார்.

சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் காட்டுராஜாவிடம் தொடர்ந்து பேச்சு வார்த்தை நடத்தி வருகின்றனர். ஆளும் கட்சியினரிமே கூடுதல் கமிசன் கேட்டு பில் தர மறுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதோடு, காட்டுராஜா உண்ணாவிரத போராட்டம் அதிகாரிகளுக்கு எரிச்சலை ஏற்படுத்துவதால் கைது செய்யப்படலாம் என்ற தகவல் வெளியானது, பின்னர், மாவட்ட ஊராட்சிகள் உதவி இயக்குநர் சென்னை சென்றுள்ளதால், பாடாலூர் போலீசார் மற்றும், ஊரக வளர்ச்சித் துறை அதிகாரிகள், நாளை மறுநாள் பில் தொகை வழங்கப்படும் தெரிவித்தன் பேரில் காட்டுராஜா மற்றும் அவரது மனைவியும் மாவட்ட செயலாளருமான அருள்செல்வி இருவரும் போராட்டத்தை ஒத்தி வைத்தனர்.

மேலும், மாவட்டத்தில் ஒரு கோடிக்கு பணி என்றால் அதற்கு ரூ. 4.5 லட்சம் முதல், 20 லட்சம் வரை அதிகாரிகள் கமிசனாக பெறுவது தெரியவந்துள்ளது.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!