Adventure in Perambalur: Jewels stolen by breaking the lock of the house in broad daylight!
பெரம்பலூர் எளம்பலூர் சாலையில் உள்ள நேரு நகரை சேர்ந்தவர், கோவிந்தராஜ். இவரது மனைவி அமுதா (39). வாடகை வீட்டில் குடுபத்துடன் குடியிருந்து வருகின்றனர். அருகே உள்ள தனியார் பள்ளிக்கு எதிரில், புதிதாக வீடு கட்டி வருகிறார். இதை பார்வையிட காலை 11.30 மணிக்கு சென்றவர், மதியம் 2.30 மணி அளவில் வீட்டிற்கு வந்து திரும்பி பார்த்த போது, வீட்டின் கதவுகளின் பூட்டு, தாழ்பாள் உடைக்கபட்டு கிடந்தது. அதிர்ச்சி அடைந்த அவர் உள்ளே சென்று பார்த்த போது, பீரோவின் உள் லாக்கரில் இருந்த, சுமார் தங்க சங்கிலிகள், மோதிரம், தோடு என 17 பவுன் தங்க நகைகள் களவு போயிருப்பது தெரிய வந்தது. இது குறித்து அவர் கொடுத்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த பெரம்பலூர் போலீசார், மோப்ப நாய் மற்றும், தடய அறிவியல் நிபுணர்களின் உதவியோடு கொள்ளையர்களை பிடிக்க தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
பட்டப்பகலில் நடந்த இச்சம்பவம் அப்பகுதியில் இன்று பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.