Agriculture Exhibition from 26th to 3rd day in Namakkal
நாமக்கல் நகரில் வேளாண்மைத்திருவிழா வருகிற 26ம் தேதி துவங்கி 3 நாட்கள் நடைபெறுகிறது.
தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கி வரும் நாமக்கல் வெளாண்மை அறிவியல் நிலையத்தில், விவசாயிகளின் வருமானத்தை இருமடங்காக்கும் தொழில்நுட்பங்கள் குறித்த வேளாண் திருவிழா-2018, கருத்தரங்கம் மற்றும் கண்காட்சி வருகின்ற 26ம் தேதி முதல் 28ம் தேதி வரை 3 நாட்கள் நாமக்கல் பரமத்தி ரோட்டில் உள்ள பாவை மகால் திருமண மண்டபத்தில் நடைபெறுகிறது. தினசரி காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை இந்த விழா நடைபெறும். நாமக்கல் வேளாண்மை அறிவியல் நிலையம் மற்றும் மாவட்ட இணைத்துறைகளான வேளாண்மைத்துறை, கால்நடைத்துறை, தோட்டக்கலை, பட்டு வளர்ச்சி மற்றும் வனத்துறைகளுடன் இணைந்து சிறப்பாக நடத்தப்பட உள்ளது.
இந்நிகழ்ச்சியில் 45க்கும் மேற்பட்ட அரங்குகள் கொண்ட கண்காட்சி அமைக்கப்பட்டு விவசாயம் சம்மந்தப்பட்ட பல்கலைக்கழக வல்லுநர்களின் கருத்தரங்கம் மற்றும் காணொலிக்காட்சி மூலம் விரிவாக எடுத்துரைக்கப்படும். விவசாயம் மற்றும் இதர துறைகளின் புதிய தொழில்நுட்பங்கள் செயல்விளக்கங்கள் மூலம் காண்பிக்கப்படும். இத்துடன் தொழில்நுட்ப வல்லுநர்கள் மற்றும் விவசாயிகள் கலந்துரையாடல் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. விவசாய பெருமக்கள் பெருமளவில் இவ்விழாவில் கலந்து கொண்டு பயனடையுமாறு வேளாண்மை அறிவியல் நிலைய தலைவர் டாக்டர் அகிலா கேட்டுக்கொண்டுள்ளார்.