AIADMK candidate RT Ramachandran from Kunnam constituency Intense vote collection in Veppur Union: Sprinkle flowers, take Aarti and welcome!
பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள குன்னம் சட்ட மன்ற தொகுதியில் 2வது முறையாக களம் காணும் அதிமுக வேட்பாளர் ஆர்.டி.இராமச்சந்திரன் இன்று வேப்பூர் ஒன்றியத்திலுள்ள முருக்கன்குடி கிராமத்தில் தனது தேர்தல் பிரச்சார பயணத்தை கூட்டணி கட்சியினருடன் தொடங்கினார்.
வழி நெடுகிலும் பெண்கள் ஆங்காங்கே ஆரத்தி எடுத்து வெற்றி திலகமிட்டும், மலர் தூவி, மாலை அணிவித்து மரியாதை செய்தும், பட்டாசு வெடித்தும் உற்சாக வரவேற்பு அளித்தனர். முருக்கன்குடியை தொடர்ந்து பெருமத்தூர் குடிக்காடு, நல்லூர், பெருமத்தூர், மிளகாய்நத்தம், வைத்தியநாதபுரம், கிளியூர், நன்னை, சாத்தநத்தம், ஜிஆர்.பட்டிணம், வடக்களூர், கிழுமத்தூர், கத்தாழைமேடு, வேள்விமங்களம், கைப்பெரம்பலூர், கீழப்பெரம்பலூர் ஆகிய கிராமங்களுக்கு பிரச்சார வாகனத்திலும், வீதி, வீதியாக நடந்து சென்றும்
அதிமுக ஆட்சியின் 10 ஆண்டு கால சாதனைகளையும், தேர்தல் அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ள திட்டங்களை எடுத்து கூறியும், அந்தந்த கிராம மக்களின் கோரிக்கைகளையும் நிறைவேற்றி தருவதாக வாக்குறுதி அளித்து பொதுமக்களிடம் இரட்டை இலை சின்னத்திற்கு வாக்குகளை சேகரித்தார். பிரச்சாரத்தில், பாமக, பாஜக, தாமக உள்ளிட்ட கூட்டணி கட்சியினர் உடனிருந்தனர்.