AIADMK government writes off co-operative loans, RT Ramachandran campaigns for support again!
பெரம்பலூர் மாவட்டத்திற்கு குன்னம் தொகுதி வேட்பாளராக களம் காணும் ஆர்.ராமச்சந்திரன் எம்.எல்.ஏ இன்று வேப்பூர் ஒன்றியத்தில் இன்று வாக்குகள் சேகரிப்பில் தனது கட்சி மற்றும் பாமக, பாஜக உள்ளிட்ட கூட்டணி கட்சியினருடன் ஈடுபட்டார். லெட்சுமிபுரத்தில் தொடங்கிய அவர், சமத்துவபுரம், ஒதியம், மூங்கில்பாடி, பெரியம்மாபாளையம், கரம்பியம், குன்னம், கொத்தவாசல், சின்னவெண்மணி, கொளப்பாடி, நல்லறிக்கை, புதுக்குடிசை, காடூர் ஆகிய ஊர்களில் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அதிமுக ஆட்சியின் சாதனைகளை எடுத்துரைத்தார். கூட்டுறவு கடன்கள், பயிர்க்கடன்கள், மகளிர் சுயஉதவிக்குழு கடன்கள் போன்றவற்றை தள்ளுபடி செய்ததோடு, பல்வேறு நலத்திட்டங்களை செய்துள்ளது. அதோடு, தாலிக்கு தங்கம், வாசிங்மெசின் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை பெண்களுக்கு முன்னுரிமை கொடுத்த கட்சி அதிமுக. எனவே இரட்டை இலை சின்னத்திற்கு வாக்களித்து பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி செய்ய வேண்டும் என வாக்காளர்களிடம் கேட்டுக் கொண்டார். முன்னதாக ஆங்காங்கே வேட்பாளர் ஆர்.டி.இராமச்சந்திரனுக்கு, மலர் மாலை அணிவித்தும், வேட்டுகள் முழங்கவும், மேளதாளம் ஒலிக்கவும், பெண்கள் ஆரத்தி எடுத்து வெற்றி திலகமிட்டனர்.