AIADMK protest against the DMK government: A large number of people are arranged to participate, a decision was taken at the consultation meeting in Perambalur!

பெரம்பலூரில், அதிமுக சார்பில், மாநில எம்.ஜி.ஆர் மன்ற இளைஞரணி செயலாளர் சிவபதி மற்றும் முன்னாள் துணை சபாநாயகரும், அமைப்பு செயலாளருமான வரகூர் ஆ.அருணாச்சலம் தலைமையில் நிர்வாகிகள் கூட்டம் நடந்தது. பெரம்பலூர் நகர செயலாளர் ராஜபூபதி வரவேற்றார்.

கூட்டத்தில், தமிழக முழுவதும் வரும் 26ம் தேதி திமுக அரசை கண்டித்தும், மின்சார கட்டண உயர்வு, சொத்து வரி உயர்வு, தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றதை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவது என்றும், அதிமுகவிற்கு, இடைக்கால செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டதற்கு நன்றி தெரிவித்தும்,

எதிர் வரும். நாடாளுமன்ற, சட்ட மன்ற தேர்தலில் 100 சதவீத வெற்றி பெறவும். அதிமுக தலைமைக் கழகத்தில் குண்டர்களை வைத்து கோப்புகளை திருடி சென்ற ஓ.பன்னீர்செல்வம், ஆர்.வைத்திலிங்கம் ஆகியோருக்கு கண்டனம் தெரிவித்தும், சீல் வைக்கப்பட்ட தலைமை கழகத்தின் சட்ட போராட்டத்தால் மீட்ட இடைக்கால பொதுச் செயலாளர் பழனிசாமிக்கு நன்றி தெரிவித்தும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

முன்னதாக புதிய பேருந்து நிலையத்தில் உள்ள முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோரின் உருவ சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

மாநில எம்ஜிஆர் மன்ற இளைஞரணி செயலாளர் சிவபதி பேசியதாவது:

தலைமையில் வேண்டுகோளுக்கு இணங்க நடைபெறும் கண்டன ஆர்பாட்டத்தில் திராளன கட்சி தொண்டர்கள் கலந்து கொண்டு திமுக அரசை வீட்டிற்கு அனுப்ப வேண்டும், நம்பிக்கை துரோகி ஓபிஸ் கட்சியால் தன் குடும்பத்தை வளர்தவர், தன்னை நம்பி வந்தவர்களுக்கு எதுவும் செய்யாதவர், அமைதிப்படை அமாவசை போன்றவர் என்றும், அதிமுக ஐடி விங்கை மிரட்டும் காவல் துறை இதோடு நிறுத்திக் கொள்ள வேண்டும், எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் பெரம்பலூர் மாவட்டத்திற்கு பணி செய்ய வந்திருப்பதாகவும், தொண்டர் அனைவரும் அமைப்பு செயலாளரையும், என்னையும் தொடர்பு கொண்டு கட்சி பிரச்சனைகளுக்கு தீர்வு காணலாம் என பேசினார்.

இக்கூட்டத்தில் முன்னாள் எம்.பிக்கள் சந்திரகாசி, மருதைராஜா, முன்னாள் எம்.எல்.ஏக்கள் ஆர்.தமிழ்ச்செல்வன், பூவை.செழியன், எம்.ஜி.ஆர் மன்ற செயலாளர் எம்.என்.ராஜாராம், மாவட்ட பொறுப்பாளர்கள் ராணி, ராஜேஷ்வரி, லட்சுமி, அணிச்செயலாளர்கள் ஒன்றிய கழக செயலாளர்கள் சிவப்பிரகாசம், கர்ணன், ரவிச்சந்திரன் செல்வகுமார், செல்வமணி, சந்திரகாசி, ரமேஷ் மற்றும் கீழக்கரை து.பன்னீர்செல்வம் பேரூர் செயலாளர்கள், கிளை செயலாளர்கள், உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!