AIADMK protested the Perambalur municipality for not properly distributing drinking water!

பெரம்பலூர் நகராட்சி பகுதியில் கடந்த சுமார் 25 நாட்களாக குடிநீர் வினியோகம் செய்யப்படாததை கண்டித்து இன்று 50 க்கும் மேற்பட்ட அதிமுகவினர் நகராட்சி அருகே சாலை மறியலில் ஈடுபட்டனர்.

பெரம்பலூர் நகராட்சியில் முறையாக குடிநீர் வினியோகம் செய்ய வலியுறுத்தியும், குடிநீர் வரி பொதுமக்கள் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்க கோரியும், அதிமுக நகர செயலாளர் ராஜபூபதி தலைமையில் இன்று நகராட்சி (பொ) ஆணையரிடம் மனு கொடுத்தனர். அப்போது, நகராட்சி (பொ) குடிநீர் வழங்க காலதாமதம் ஆகும் என தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனால், உடனடியாக குடிநீர் வினியோகம் செய்ய வலியுறுத்தியும் காரையில் இருந்து வரும் காவிரி குடிநீர் திட்டத்தில் இருந்து தண்ணீர் வழங்க கோரியும், அதிமுகவினர் நகராட்சி அருகே இன்று காலை சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவல் அறிந்த போலீசார், சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் சாலைமறியலில் ஈடுபட்டவர்களை கைது செய்து தனியார் திருமண மண்டபத்திற்கு அழைத்து சென்றனர். இதனால் , அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. பெரம்பலூர் ஒன்றிய செயலாளர் செல்வக்குமார், முன்னாள் நகராட்சித் தலைவர் ரமேஷ், கவுன்சிலர்கள் லெட்சுமி சரவணன், பழனிச்சாமி, முன்னாள் கவுன்சிலர் லோகு, நகர இணைச் செயலாளர் பரமேஸ்வரி கருப்பணன், நகர துணைச் செயலாளர் சின்னசாமி, உள்ளிட்ட 50 க்கும் ற்பட்டோர் கலந்து கொண்டனர்.

நகராட்சித் தரப்பில், கலெக்டரிடம் அனுமதி பெற்று காரையில் இருந்து பெரம்பலூர் காவிரி குடிநீர் வழங்க விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிகிறது.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!