An Engineer Council should be set up on behalf of the government: Resolution of the State General Committee Meeting of All Engineers Association of Tamil Nadu and Puducherry!

தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநிலங்கள் முழுவதும் கட்டுமானத் தொழில் புரியும் கட்டிட பொறியாளர்களை பெருவாரியாக உள்ளடக்கிய தமிழகம் மற்றும் புதுச்சேரி அனைத்து பொறியாளர்கள் சங்க கூட்டமைப்பின் ஆண்டு பொதுக்குழு கூட்டம் இன்று பெரம்பலூரில், மாநில தலைவர், எம்.ரவி தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் சென்னை பெருநகர் முதல் கன்னியாகுமரி வரையிலான 90க்கும் மேற்பட்ட உறுப்பினர் பொறியாளர் சங்கங்கள் கலந்து கொண்டு கீழ்கண்டவாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

கட்டுமானத்துறை பொறியியல் கல்வி பயின்று பட்டம் பெற்ற பொறியாளர் அல்லாதோர் கட்டுமானத்தொழில் செல்வதால் நாடெங்கும் அவ்வப்போது கட்டுமானங்களில் பல அசம்பாவிதங்கள் நிகழ்வதை தடுக்கவும், முறையாக கட்டுமானப் பொறியியல்துறை பயின்ற பொறியாளர்கள் மட்டுமே கட்டுமானத் தொழில் செய்ய ஏதுவாகவும், கட்டுமானத் துறையை வரைமுறைப்படுத்தவும், அரசு சார்பில் பொறியாளர் கவுன்சில் உடனடியாக அமைக்க வலியுறுத்தியும்,

கட்டுமானத்திற்கு மிக முக்கிய பங்காற்றும் சிமெண்ட்டின் மூலப்பொருட்கள் தட்டுபாடின்றி கிடைத்து வரும் நிலையிலும், அவற்றின் அடிப்படை விலை ஸ்திரமாக இருந்தும், சிமெண்ட் உற்பத்தி நிறுவனங்கள் எவ்வித காரணமின்றி திடீரென்று விலையேற்றம் செய்வதால், மொத்த ரேட்டில் கட்டிடங்கள் எடுத்து வேலை செய்யும் எண்ணற்ற பொறியாளர்கள் பாதிக்கப்படுகிறார்கள். எனவே, சிமெண்ட் உற்பத்தி நிறுவனங்கள் திடீர் நியாயமற்ற விலையேற்றம் செய்யும் போக்கை கைவிட்டு விலையேற்றத்தை உடனடியாக வாபஸ் பெற வேண்டும். இல்லையெனில் தமிழகம் முழுவதும் உள்ள சிமெண்ட் தொழிற்சாலைகள் முன்பு கூட்டமைப்பின் சார்பில், மாநிலம் தழுவிய போராட்டம் நடத்துவது, மேலும், இதர அடிப்படைப் பொருட்களான இரும்பு, செயற்கை மணல், செங்கல், ஜல்லி போன்றவையும் எவ்வித காரணமின்றி அவ்வப்போது விலையேற்றம் செய்யப்படுகிறது. இவ்வாறான நியாயமற்ற விலையேற்றங்களால் கட்டுமானப்பொறியாளர் முதற்கொண்டு, கட்டுமானத்துறை சார்ந்த லட்சக்கணக்கான தொழிலாளர்கள் பாதிக்கப்படுகின்றனர்.

எனவே, கட்டுமான பொருட்கள் சந்தை விலையை முறைப்படுத்த கட்டுமானத்துறை பொருட்கள், ஒழுங்குமுறை விற்பனை ஆணையம் (Regulation authoritory) அமைக்க அரசை வலியுறுத்தியும், தற்போது தமிழக அரசின் நகர ஊரமைப்பு இயக்கத்தின் (DTCP) மூலமாக கட்டிட வரைபட திட்ட அனுமதி பெற அமைக்கப்பட்டுள்ள கணினி வாயிலான ஒற்றைச்சாளர முறையில் உண்டாகும் பல குளறுபடிகளால், கட்டிட அனுமதிக்குண்டான அனைத்து ஆவணங்கள் முறையாக கைவசம் வைத்திருந்தாலும், பொறியாளர்களும், சொந்தக் கட்டிடம் கட்ட விண்ணப்பிக்கும், பொது மக்களும் அலைக்கழிக்கப்படும் சூழ்நிலை உருவாகியுள்ளதை அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று, உடனடியாக இதற்கு அரசு சம்மந்தப்பட்ட துறை மூலமாக தீர்வு காண்பதன் மூலம் கட்டுமானத்தொழில் தொய்வின்றி நடைபெற வழிவகை செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி பல தீர்மானங்கள் நிறைவேற்றம் செய்யப்பட்டது.

மேற்கண்ட, பொதுக்குழு கூட்டத்தை மாநில உதவித் தலைவர் பொறியாளர்கள் பி.சிவக்குமார் மற்றும் ஆர். சீனிவாசன் தலைமையிலான பெரம்பலூர் சங்க நிர்வாகிகள் ஏற்பாடு செய்து நடத்தினர். இக்கூட்டத்தில் முன்னாள் மாநில தலைவர்கள். மாநில நிர்வாகிகள், மாநில து.தலைவர்கள் மற்றும் மண்டல தலைவர்கள், மண்டல செயலாளர்கள் மற்றும் அனைத்து மாவட்ட சங்கங்களின் பொதுக்குழு உறுப்பினர்கள் மற்றும் குழுத்தலைவர்கள் கலந்து கொண்டனர்.

பெரம்பலூர் கட்டுமான பொறியாளர்கள் சங்கத்தின் தலைவர். ஆர்.சீனிவாசன். செயலாளர்கள் பி.குணாளன். பி.வினோத்குமார், பொருளாளர் பி.ராஜா. மக்கள் தொடர்பு அலுவலர் பி.கதிரவன், துணைத் தலைவர் என்.செந்தில்குமார், துணைத் தலைவர் எஸ்.கே. தினேஷ்குமார், முன்னாள் தலைவர்கள் மற்றும் குழுத் தலைவர்கள் அனைவரும் இந்த பொதுக்குழு கூட்டத்தை சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர்.

முன்னதாக பெரம்பலூர் கட்டுமான பொறியாளர்கள் சங்கத்தின் தலைவர் ஆர்.சீனிவாசன் அவர்கள் வரவேற்றா. மாநில உதவித் தலைவர் பி.சிவக்குமார் முன்னிலை வகித்து சிறப்புரையும், மாநில செயலாளர் எஸ். குழந்தைவேலு நன்றி கூறினார்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!