Anna’s birthday ceremony on behalf of DMK in Namakkal: GandhiSelvan garland to honor the statue
நாமக்கல்லில் திமுக சார்பில் அண்ணா பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.
நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக சார்பில் அண்ணாவின் 110வது பிறந்தநாள் விழா நாமக்கல் மோகனூர் ரோட்டில் உள்ள அண்ணா சிலை அருகில் நடைபெற்றது. விழாவிற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் காந்தி செல்வன் தலைமை வகித்தார். விழாவில் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
பின்னர் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் மாநில மகளிர் தொண்டரணி துணை அமைப்பாளர்ராணி, சட்டதிட்ட திருத்தக்குழு உறுப்பினர் நக்கீரன், மாவட்ட துணை செயலாளர் இராமலிங்கம், தலைமை செயற்குழு உறுப்பினர் பவித்திரம் கண்ணன், இளஞ்செழியன், பொதுக்குழு உறுப்பினர் மாயவன், நகர பொறுப்பாளர் மணிமாறன், ஒன்றிய செயலாளர்கள் பழனிவேல், பாலு, முன்னாள் எம்எல்ஏ சரஸ்வதி, சார்பு அணி அமைப்பாளர்கள் ராணி பெரியண்ணன், சத்தியபாபு, ரமேஷ், மார்டின் கிரிஸ்டோபர், நாசர்பாஷா, நகர பொறுப்புக்குழு உறுப்பினர் சரவணன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்துகொண்டனர்.