Announcement of selection of new recruits for Perambalur District Home Guard
பெரம்பலூர் மாவட்ட காவல்துறை சார்பில் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:
பெரம்பலூர் மாவட்ட ஊர்க்காவல் படைக்கு (25 ஆண்கள் + 4 பெண்) 29 காலிபணியிடங்களுகான தேர்வு நடைபெற உள்ளது. நவம்பர் மாதம் நவ. 9 மற்றும் 10 ஆகிய இரு நாட்களில் காலை 10.00 மணி முதல் மாலை 04.00 மணி வரை பெரம்பலூர் மாவட்ட ஊர்க்காவல் படை அலுவலகத்தில் விண்ணப்பங்கள் வழங்கப்படும். பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள்/பெறாதவர்களாக இருக்க வேண்டும்.
ஆண்கள் மற்றும் பெண்கள் இருபாலரும் சேரலாம். உடல் ஆரோக்கியமாகவும், தேர்விற்கு விண்ணப்பிக்கும் நாள் அன்று 20 வயது நிறைவடைந்தவராகவும், 45 வயது நிறைவடையாதவராகவும் இருக்கவேண்டும். கல்வி சான்றிதழ், சாதி சான்றிதழ், ஆதார் அட்டை அசல் மற்றும் நகல்கள் ஒன்றை எடுத்து வர வேண்டும். மேலும் உடற்தகுதிகள் காவல்துறையை போன்றது. தற்போது எடுக்கப்பட்ட பாஸ்போர்ட் அளவு புகைப்படம் 2 எடுத்து வரவேண்டும்.
இந்திய குடியுரிமை பெற்றவராகவும், அரசியல் கட்சி தொடர்பு இல்லாதவராகவும் இருக்க வேண்டும். இப்பணிக்கு மாத ஊதியம் எதுவும் இல்லை. பணி நாட்களுக்கு உரிய படித்தொகை மட்டும் வழங்கப்படும். பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர்களாக இருக்க வேண்டும். பணிக்கு தேர்வானர்கள் 3 ஆண்டுகள் கட்டாயம் தொடர்ந்து பணிக்கு வருகை தர வேண்டும். தேர்வு நாள் அன்று எவ்வித பயணப்படியும் வழங்கப்படமாட்டாது. 45 நாட்கள் கவாத்து பயிற்சி நடைபெறும், என தெரிவிக்கப்பட்டுள்ளது.