Assistance to industrial under the Prime Minister’s Employment Planning Scheme : perambalur collector

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் வே.சாந்தா விடுத்துள்ள தகவல் :

குறுந்தொழில்கள் மற்றும் கிராமத் தொழில்களை ஊக்குவிக்கும் பொறுட்டு பிரதம மந்தரியின் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம் (PMEGP) , மாவட்ட தொழில் மையம், கதர் கிராம தொழில் ஆணையர், கதர் கிராம தொழில் வாரியம் மூலமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இத்திட்டத்தின் கீழ் தொழில் கடன் பெற்று சுயதொழில் செய்ய விரும்பும் பயனாளிகள் http://www.kviconline.gov.in என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம்.

உற்பத்தி சார்ந்த தொழில் தொடங்க அதிகபட்சமாக ரூ. 25 லட்சம் வரையிலும், சேவை சார்ந்த தொழில்களுக்கு அதிகபட்சமாக ரூ.10 லட்சம் வரையிலும், வங்கி மூலம் கடன் பெறும் வசதி செயல்படுத்தப்பட்டு வருகின்றது.

உற்பத்தி பிரிவின் கீழ் ரூ.10 லட்சத்திற்கு மேல் திட்ட மதிப்பீடு உள்ள தொழில்களுக்கும், சேவை பிரிவின் கீழ் 5 லட்ச ரூபாய்க்கு மேல் திட்ட மதிப்பீடு உள்ள தொழில்களுக்கும், குறைந்தபட்சம் 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

நகர் மற்றும் கிராம பகுதிகளில் மாவட்ட தொழில் மையம் வாயிலாகவும் கிராம பகுதிகளில் கதர் கிராம தொழில்கள் ஆணையம் மற்றும் தமிழ்நாடு கதர் கிராம தொழில்கள் வாரியம், வாயிலாகவும் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

அதன்படி, நடப்பு நிதி ஆண்டில் மாவட்ட தொழில் மையம் மூலம் மானியத்திற்காக ரூ.111.50 இலட்சமும், 440 நபர்களுக்கு வேலை வாய்ப்பினை வழங்கிடவும் இலக்கீடு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஆதலால், ஆர்வமுள்ள தொழில் முனைவோர்கள் http://www.kviconline.gov.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பித்து பயன்பெறலாம், என கேட்டுக் கொண்டுள்ளார்.

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2024 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!