At the time of death, as a last wish, the cleanliness guard who died while wearing uniform near Perambalur!

பெரம்பலூர் அருகே பெண் தூய்மை பணியாளர் ஒருவர் தன்னுடைய கடைசி ஆசையான தூய்மைகாவலர் சீருடையை அணிந்தவாறே உயிரிழக்க வேண்டும் என்று கூறிவந்த நிலையில் அவர் அவ்வாறே உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்துடன் நெகிழ்வையும் ஏற்படுத்தியுள்ளது.

பெரம்பலூர் அருகே உள்ள வேப்பந்தட்டையை சேர்ந்தவர் பட்டு (53) .சிறுவயதிலேயே கணவரை இழந்த அவர், தனது 3 குழந்தைகளையும் கூலிவேலை பார்த்து காப்பாற்றியுள்ளார். இந்த நிலையில் அவர் 2017 ஆம் ஆண்டு வேப்பந்தட்டை ஊராட்சியில் தற்காலிக தூய்மை பணியாளராக சேர்ந்தர். பார்ப்பது தினக்கூலி வேலை என்றாலும் தனக்கு கிடைத்த துப்புரவு பணியை கண்ணும் கருத்துமாக பொறுப்புடன் செய்து வந்துள்ளார்.

வார்டுவாரராக வண்டியை தள்ளிக்கொண்டே குப்பை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டுவந்த பட்டு, தான் இறக்கும் போது தூய்மைகாவலர் சீருடையை அணிந்தவாறே இறக்கவேண்டும் வேண்டும் என்று சக பணியாளர்களிடமும்,உறவினர்களிடமும் அவ்வப்போது கூறிவந்துள்ளார். இந்நிலையில் தூய்மை பணியாளர் பட்டுவிற்கு நள்ளிரவில் மாரடைப்பின் காரணமாக உடல்நலக்குறைவு ஏற்ப்பட்டதாக கூறப்படுகிறது. தனது இறுதிகாலம் நெருங்கிவிட்டதை அறிந்த பட்டு, தன்னுடைய தூய்மைகாவலர் சீருடையை உறவினர்களிடம் கேட்டுவாங்கி அணிந்துள்ளார். அடுத்த சில நிமிடங்களிலேயே உயிரிழந்தர். .பட்டுஅவரது கடைசிஆசையான தூய்மை காவலர் சீருடை அணிந்தவாறே உயிரை விட்டது சக தூய்மை பணியாளர்களிடமும் உறவினர்களிடமும் பெரும் சோகத்தையும் நெகிழ்வையும் ஒருசேர ஏற்படுத்தியுள்ளது.

பார்ப்பது கடைநிலை பணியான துப்புறவு பணியே ஆயினும் அதன் மீது அவர்கொண்ட ஆர்வத்தை இச்சம்பவம் உணர்த்தியுள்ளது. செய்யும் தொழிலே தெய்வம் என்பதை ஒவ்வொரு பணியாளர்களும், பட்டு போன்றவர்கள் மூலம் காலம் நமக்கு உணர்த்திக் கொண்டே உள்ளது.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!