Attempt to set fire to woman at Perambalur Collector’s office: Rs. 1.5 crore worth house looted!

 

பெரம்பலூர் மாவட்டம், லப்பைக்குடிக்காடு, பிலால் தெருவை சேர்ந்தவர் ஹாஜிமுகமது (65), ரஜியபேகம்(50) தம்பதியினர். இவர்களுக்கு ஷபீன்தாஜ்(39), ஆரிப்(38), ஷாகுல்பாஷா(35), அக்கீம்பாஷா(33), என்ற நான்கு மகள், மகன்கள் உள்ளனர்.

இந்நிலையில் கடந்த 2008 ஏப்ல் 30 ஆம் தேதி மருத்துவம் உள்ளிட்ட குடும்ப செலவுக்காக அதே பகுதியில் உள்ள பெண்ணக்கோணம் கிராமத்தை சேர்ந்த பழனிமுத்து மகன் சாந்தப்பன்(60), என்பவரிடம் தங்களுக்குச் சொந்தமான மெத்தை வீட்டை கிரையம் ஆக எழுதிக் கொடுத்து 10 லட்ச ரூபாய் கடனாக பெற்றதாகவும், அதற்கு மாதம் 20 ஆயிரம் ரூபாய் சாந்தப்பனுக்கு வட்டி கொடுத்து வந்த நிலையில், திடீரென ஏற்பட்ட உடல்நலக் குறைவால் கடந்த 18- 10-2010ஆம் தேதி ரஜியபேகம் உயிரிழந்தார்.

இந்நிலையில் வருமானம் இன்றி தவித்து வந்த ரஜியா பேகத்தின் குடும்பத்தினர் வீட்டை வாடகைக்கு விட்டு வாடகை தொகையை வட்டியாக எடுத்துக் கொள்ளும்படி சாந்தப்பனிடம் தெரிவித்து விட்டு, குடும்ப வறுமையை போக்கிட வெளியூரிலும் வெளிநாட்டிலும் வேலைக்கு சென்றுவிட்டனர்.

இதனை சாதகமாக்கிக் கொண்ட சாந்தப்பன் தனக்கு வேண்டப்பட்ட ஒரு நபரை வாடகைக்கு அமர்த்தி விட்டு தற்போது வீட்டை காலி செய்த மறுத்து வருவதோடு இருபது லட்ச ரூபாய் பணம் கொடுக்க முன்வரும் ரஷ்யா பேகத்தின் குடும்பத்தாரை வீடு எனக்கு சொந்தம் என மிரட்டுவதாக கூறப்படுகிறது.

இதனால் அதிர்ச்சி அடைந்த ரஜியா பேகத்தின் குடும்பத்தார் மங்களமேடு காவல் நிலையம், பெரம்பலூர் கலெக்டர் மற்றும் எஸ்பி, டிஐஜி என பல்வேறு இடங்களில் புகார் தெரிவித்தும் வீட்டை மீட்டு தர எவ்வித நடவடிக்கையும் எடுக்காததால் மனமுடைந்த ரஜியா பேகத்தின் மகள் ஷபீன்தாஜ் இன்று பெரம்பலூர் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து தனது உடலில் மண்ணெண்ணெயை ஊற்றிக் கொண்டு தீக்குளிக்க முயன்றார்.

மேலும், 10 லட்ச ரூபாய்க்கு அடமானமாக வைத்த 1 கோடியே 50 லட்ச ரூபாய் மதிப்பிலான வீட்டை அபகரிக்க நினைக்கும் சாந்தப்பன் மீது நடவடிக்கை எடுப்பதோடு வீட்டை மீட்டுத்தரக்கோரி கூச்சலிட்டார்.

இதனைக் கண்ட பாதுகாப்பு பணியிலிருந்த பெரம்பலூர் போலீசார் உடனடியாக ஓடிச்சென்று ஷபீன்தாஜை தடுத்து நிறுத்தி, அவரது உடலில் தண்ணீரை ஊற்றி, உடை மாற்றிக்கொள்ள அறிவுறுத்தி, காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பெண் ஒருவர் திடீரென தனது உடலில் மண்ணெண்ணெயை ஊற்றிக் கொண்டு தீக்குளிக்க முயன்ற சம்பவம் பெரம்பலூர் கலெக்டர் அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.


இதுகுறித்து சாந்தப்பனிடம் செல்போனில் தொடர்பு கொண்டு கேட்ட போது : அன்றைய வீட்டின் மதிப்பீட்டின்படி 27 லட்ச ரூபாய் ரொக்கப் பணம் கொடுத்து வீட்டை கிரையம் வாங்கியதாகவும், 14 வருடங்களுக்குப் பிறகு சொத்தின் மதிப்பை தெரிந்து கொண்டு என்னிடமிருந்து மீண்டும் எழுதி வாங்கி விடலாம் என்ற நோக்கத்தோடு தன்னை ரஜியாபேகத்தின் குடும்பத்தார் மிரட்டி பார்ப்பதாகவும், வழக்கு தொடரும் பட்சத்தில் சட்டப்படி வழக்கை எதிர்கொள்ள தயார் வீட்டை திருப்பி தர முடியாது என திட்டவட்டமாக தெரிவித்தார்.

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2025 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!