Auto union’s petition demanding action against electricity in Perambalur municipality

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் கூட்ட அரங்கில் நேற்று நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர் கூட்டத்தில், 3 பிளஸ் 1 ஆட்டோ மற்றும் அனைத்து வகை ஓட்டுனர் சங்கத்தினர் மனு ஒன்றை அளித்தனர்.

அதில், பழையபேருந்து நிலையம் அம்பேத்கர் சிலை பின்புறம் பலஆண்டுகளாக ஆட்டோ ஸ்டாண்டு செயல்பட்டு வருகிறது. அப்போது அந்த இடத்தில் சிலர் ஆக்கிரமிப்பு செய்தபோது அப்போது இருந்த ஆட்சியர் தரேஸ் அஹமது ஆக்கிரமிப்பை அகற்ற உத்தரவிட்டு ஆட்டோ ஸ்டாண்ட் வைக்க அனுமதி வழங்கியுள்ளார். ஆனால், அந்த இடத்தில் ஆக்கிரமிப்பு செய்து மீண்டும் கடைகளை கட்டி வாடகைக்கு விட்டுள்ளனர்.

இது தொடர்பாக 12.5.2017 அன்று நகராட்சி ஆணையரிடமும், மின்வாரிய செயற்பொறியாளரிடமும் மனு கொடுத்துள்ளதாகவும், 15.5.2017 அன்று மாவட்ட ஆட்சியர் மற்றும் வருவாய் வட்டாட்சியரிடமும் மனு அளித்தபோது உடனடியாக ஆக்கிரமிப்பு செய்துள்ள இடத்தை அகற்றி விடுவதாகவும் கூறிவிட்டு இதுநாள் வரை எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை எனவும் ஆக்கிரமிப்பு செய்த இடம் என்று தெரிந்தும் நகராட்சி நிர்வாகமும் மின்வாரியமும் முறைகேடாக அனுமதி அளித்துள்ள நிலையில் ஆட்சியர் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மனுவில் தெரிவித்துள்ளனர்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!