Automatic Patta change for householders: Perambalur Collector Venkatapriya Information!


பெரம்பலூர் கலெக்டர் வெங்கடபிரியா விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:

வீட்டுமனை உரிமையாளர்கள் அவர்களது பெயரிலேயே தனித்தனிப் பட்டாக்களாக இணையதளம் மூலமாக பதிவு செய்ய சிறப்பு வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. பெரம்பலூர் மாவட்டம், நகர ஊரமைப்பு துணை இயக்குநரிடம் வீட்டுமனை அங்கீகாரம் பெறும் நில உரிமையாளர்கள் தங்களது வீட்டுமனைகளை அவர்களது பெயரிலேயே தனித்தனி பட்டாக்களாக பெறும் வசதி தமிழ்நில இணையதளத்தில் தற்போது ஏற்படுத்தப்பட்டுள்ளது.

அதனைப் பயன்படுத்தி ஜனவரி-2022 முதல் வீட்டுமனை அங்கீகாரம் பெற்ற உரிமையாளர்கள் தங்களது நிலத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ள வீட்டு மனைகளுக்கு ஒரு வீட்டு மனைக்கு ரூ.400/- வீதம் உட்பிரிவு கட்டணம் செலுத்தி, பொது சேவை மையத்தில் பதிந்து கொண்டு பயன்பெறலாம். இதனால் நில உரிமையாளர் தனது வீட்டு மனையினை கிரயம் செய்யும் போது தங்களிடம் கிரயம் பெற்ற நபருக்கு தானியங்கி மூலம் பட்டா மாற்றம் செய்யப்பட்டு விடும், என தெரிவித்துள்ளார்.

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2024 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!