Award-winning teachers praise the collector nallaciriyar
நல்லாசிரியர் விருதுபெற்ற பெரம்பலூர் மாவட்ட ஆசிரியர்கள் மாவட்ட ஆட்சியர் வே.சாந்தா சந்தித்து வாழ்த்துப் பெற்றனர்.
சென்னையில் 05.08.2017 அன்று நடைபெற்ற விழாவில் தமிழக முதலமைச்சர் பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த 5 ஆசிரியர் பெருமக்கள் நல்லாசிரியர் விருதுப் பெற்றனர். தமிழக முதலமைச்சர் நல்லாசிரியர் விருது பெற்ற ஆசிரியப் பெருமக்கள் இன்று (08.09.2017) மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் மாவட்ட ஆட்சியர் வே.சாந்தா, சந்தித்து, தாங்கள் பெற்ற நல்லாசிரியர; விருதுகளை காண்பித்து வாழ்த்துப் பெற்றனர்.
மாணவர்களுக்கு கல்வியோடு ஒழுக்கம், பன்பு, தன்னம்பிக்கை, விடாமுயற்சி, பொது அறிவு ஆகியவற்றை போதிக்கும் ஆசிரியப் பெருமக்களின் பணியினை பாராட்டி ஆண்டுதோறும் தமிழ்நாடு அரசு நல்லாசிரியர் விருது வழங்கி கௌரவித்து வருகிறது. அதன்படி, நல்லாசிரியர் விருது பெறும் ஆசிரியர்களை மேலும் ஊக்கப்படுத்தும் விதமாக ரூ.10,000- ரொக்கப் பரிசுடன் தங்க முலாம் பூசப்பட்ட பதக்கமும் வழங்கப்பட்டு வருகிறது.
செட்டிக்குளம் அரசு மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் நாகமணி, பெரம்பலூர் அரசு மேல்நிலைப்பள்ளி உடற்கல்வி ஆசிரியர் நாகராஜன், ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி, பேரளி தலைமையாசிரியர் ஜான்சிராணி, ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி, தொண்டமாந்துறை தலைமையாசிரியர் செல்வராணி, ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி, விஜயகோபாலபுரம் திருநாவுக்கரசு உள்ளிட்ட 5 ஆசிரியர்களுக்கு சென்னையில் நடைபெற்ற விழாவில் தமிழக முதலமைச்சரால் நல்லாசிரியர் விருது வழங்கப்பட்டது.
நல்லாசிரியர் விருதுப் பெற்ற ஆசிரியர்கள் இன்று மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் மாவட்ட ஆட்சியர் வே.சாந்தா சந்தித்து, தாங்கள் பெற்ற நல்லாசிரியர் விருதுகளை காண்பித்து வாழ்த்துப் பெற்றனர்.
சிறந்த கல்விப் பணி ஆற்றி நல்லாசிரியர் விருது பெற்ற அனைத்து ஆசிரியர்களுக்கு எனது மனமார்ந்த பாராட்டுதல்களையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துககொள்வதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.
இந்நிகழ்வின் போது முதன்மை கல்வி அலுவலர் அருள்மொழிதேவி, மாவட்ட தொடக்கல்வி அலுவலர் முருகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.