Awareness among farmers in villages led by Indira, deputy director of horticulture department, Perambalur, to increase the supply of vegetables in the farmers market (Ulavar Santhai)

பெரம்பலூர் உழவர் சந்தையில் காய்கறி வரத்தை அதிகரிக்க உழவர் சந்தைக்கு அருகாமையில் உள்ள கிராம விவசாயிகளிடையே காய்கறி சாகுபடி பரப்பைஅதிகரித்திடவும், விவசாயிகளை விளைபொருட்களைஉழவர் சந்தைக்குகொண்டு வந்து விற்பனை செய்யும் வகையிலும் வாரந்தோறும் விழிப்புணர்வு முகாம் தோட்டக் கலைத்துறை சார்பில் நடந்து வருகிறது.

தோட்டக்கலைதுணை இயக்குநர் மா.இந்திரா தலைமையிலான அலுவலர்கள், பெரம்பலூர் உழவர் சந்தையின் செயல்பாடுகள் மற்றும் வடக்குமாதவி கிராமத்தில் காய்கறி சாகுபடி செய்த விவசாயிகளான தனபால், ராமலிங்கம், அத்தியப்பன் ஆகியோரின் வயலுக்குசென்று காய்கறி சாகுபடி குறித்து தொழில்நுட்பம் மற்றும் சாகுபடி செய்த காய்கறிகளை உழவர் சந்தைக்கு கொண்டு வருவதற்கு தேவையான நடவடிக்கைகள் குறித்து கள ஆய்வுமேற்கொண்டனர்.

பெரம்பலூர் உழவர் சந்தை சுற்று வட்டார கிராமப் பகுதிகளான எசனை, எளம்பலூர், கோனேரிப்பாளையம், ஆலம்பாடி, ரெங்கநாதபுரம் போன்ற கிராமங்களில் பயிரிடப்படும் காய்கறிப் பயிற்களான வெண்டை, தக்காளி மற்றும் கொடி வகை காய்கறிகளில் பரப்பு விரிவாக்கம் ஏற்படுத்துதல் மற்றும் விளைவிக்கப்படும் காய்கறிகள் பெரம்பலூர் உழவர் சந்தையினை பயன்படுத்தி இப்பகுதி விவசாயிகள் பயனடைந்திட விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

பெரம்பலூர் உழவர் சந்தையில் கடைகள் தேவைப்படுவோர் பெரம்பலூர் வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநர் அலுவலகத்தை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொண்டனர். பெரம்பலூர் வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநர் விஜயகாண்டிபன், பெரம்பலூர் உழவர் சந்தைஅலுவலர் செண்பகம், உதவி தோட்டக் கலை அலுவலர் மற்றும் உதவி வேளாண்மை அலுவலர்கள் ஆகியோர் உடனிருந்தனர்.

 


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!