Awareness campaign on wearing helmet on behalf of Namakkal police
நாமக்கல் காவல் துறை சார்பில் ஹெல்மெட் அணிவது தொடர்பான சாலையோர விழிப்புணர்வு பிரசாரம் நடைபெற்றது.
நாமக்கல்லில் போலீஸ் துறை சார்பில் ஹெல்மெட் அணிவது தொடர்பான சாலையோர விழிப்புணர்வு பிரசாரம் நடைபெற்றது.
நாமக்கல் மாவட்டத்தில் சமீபத்தில் நடந்த இருசக்கர வாகன விபத்துக்களில் ஹெல்மெட் அணியாததால் உயிரிழப்பு அதிகரித்துள்ளது.
இதனையடுத்து ஹெல்மெட் அணிவது தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தும்படி நாமக்கல் மாவட்ட ஏடிஎஸ்பிக்கள் செந்தில் மற்றும் சுஜாதா அனைத்து போலீஸ் ஸ்டேசன்களுக்கும் அறிவுரை வழங்கியுள்ளனர்.
அதன் பேரில் நாமக்கல் போலீஸ் ஸ்டேசன், போக்குவரத்து போலீஸ் ஸ்டேசன் ஆகியவை சார்பில் ஹெல்மெட் அணிவது தொடர்பான சாலையோர விழிப்புணர்வு பிரசாரம் நடத்தப்பட்டது.
நாமக்கல் மணிக்கூண்வு அருகே நடைபெற்ற விழிப்புணர்வு பிரசார நிகழ்ச்சிக்கு நாமக்கல் இன்ஸ்பெக்டர் குலசேகரன் தலைமை வகித்தார். டிராபிக் எஸ்ஐக்கள் ரங்கநாதன், சபாபதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் ஹெல்மெட் அணிவதால் ஏற்படும் நன்மைகளையும், விபத்துக்கள் இல்லாமல் வாகனங்கள் ஓட்ட வேண்டிய வழிமுறைகள் குறித்தும் விளக்கம் அளிக்கப் பட்டது. மேலும் பொதுமக்களுக்கு ஹெல்மெட் அணிவது குறித்த துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டது. இதில் டிராபிக் போலீசார் கலந்துகொண்டனர்.