Awareness video campaign to emphasize 100 per cent voter turnout: Perambalur Collector launched.

வரும் சட்டமன்ற பொதுதேர்தலில் 100 சதவீத வாக்குப்பதிவினை எட்டும் வகையில் விழிப்புணர்வு பிரச்சார வாகனத்தினை கலெக்டர் வெங்கடபிரியா தொடங்கிவைத்தார்.

பெரம்பலூர் மாவட்டத்தில் வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கிலும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மாவட்டம் முழுவதும் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது. வாக்களிப்பதன் அவசியம் குறித்தும், வாக்காளர் பட்டியலில் பெயர் உள்ளதை உறுதி செய்யும் வகையிலும், விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கிலும் இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி, பெரம்பலூர் மாவட்டத்தில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அந்தவகையில் பெரம்பலூர் மாவட்டத்தில் கல்லூரிகளில் விழிப்புணர்வு ஏற்படுத்துவதன் நோக்கில், வாக்காளர்கள் வாக்களிப்பதன் அவசியம் குறித்தும், வாக்காளர் பட்டியலில் பெயர் உள்ளதை உறுதி செய்யும் வகையிலும், மாணவ, மாணவியர்களை கொண்டு பேச்சுப் போட்டி, கவிதைப்போட்டி, கட்டுரைப்போட்டி, விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி ஆகியவைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அதனைத்தொடர்ந்து,பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்கள் மற்றும் கடந்த தேர்தல் காலங்களில் மாவட்டத்தில் குறைவான வாக்குப்பதிவு நடைபெற்ற பகுதிகள் ஆகிய இடங்களில் அதிநவீன மின்னணு வீடியோ வாகனம் மூலம் வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில், வாக்காளர் விழிப்புணர்வு வாகனம் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.

பெரம்பலூர் மாவட்டத்தில் நியாயமான, நேர்மையான வாக்குப் பதிவினையும், 100 சதவீதம் வாக்குப் பதிவு என்ற நோக்கத்தினையும் செயல்படுத்துவதற்காக, பெரம்பலூர் மாவட்டத்தில் பல்வேறு வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை பொதுமக்கள் கருத்தில் கொண்டு, வாக்குரிமையை நிலைநாட்ட வேண்டும் என தெரிவித்தார்.

அப்போது டி.ஆர்.ஓ ராஜேந்திரன், உள்ளிட்ட தேர்தல் தொடர்புடைய அலுவலர்கள் உடனிருந்தனர்.

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2025 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!