Baby born to pregnant mother for last 2 years not infected with HIV: Perambalur Collector

உலக எய்ட்ஸ் தினத்தை முன்னிட்டு, பெரம்பலூரில் கலெக்டர் ஸ்ரீவெங்கடபிரியா தலைமையில் உலக எய்ட்ஸ் தின உறுதிமொழி ஏற்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து எய்ட்ஸ் கட்டுப்பாடு சங்கம், மாவட்ட நிர்வாகம் மற்றும் எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு அலகு சார்பில், பத்தாம் வகுப்பு தேர்வில் மாவட்ட அளவில் முதல் மூன்று இடங்களை பெற்ற மாணவர்களுக்கு முதல் பரிசாக ரூ.3,000-ம் தொகையும், இரண்டாம் பரிசாக ரூ.2,000-ம் தொகையும், மூன்றாம் பரிசாக ஆயிரம் ரூபாய் தொகையும், மேலும் 8 பயனாளிகளுக்கு மாதாந்திர உதவித்தொகைக்கான ஆணையினையும் வழங்கிய அவர் கூட்டத்தில் தெரிவித்ததாவது:

ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் முதல் நாள் உலக எய்ட்ஸ் தினம் தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாடு சங்கம், மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு அலகு சார்பில் அனுசரிக்கப்பட்டு வருகிறது. 2020-ம் ஆண்டின் கருப்பொருள் “உலகளாவிய ஒற்றுமை, பொறுப்பை இப்பேரிடர் காலத்தில் பகிர்ந்துகொள்ளுதல் ஆகும்.

பெரம்பலூர் மாவட்டத்தில் அனைத்து கல்லூரிகளிலும் செஞ்சுருள் சங்கம் ஏற்படுத்தப்பட்டு மாணவ, மாணவியர்களுக்கு 16 மணி நேர எச்.ஐ.வி. மற்றும் பால்வினை நோய் குறித்து சமூக ஊடகங்களான பண்பலைகள், முகநூல், ட்விட்டர், இயங்கலை மூலம் வினாடி வினா போட்டிகள், ஓவியப்போட்டி, கட்டுரைப்போட்டி, சுவரொட்டிகள், துண்டு பிரசுரங்கள் வாயிலாகவும் மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது.

தமிழக அரசின் பல்வேறு நலத்திட்ட உதவிகளாக ஒவ்வொரு ஆண்டும் எச்.ஐ.வி. பாதிக்கப்பட்ட, தொற்றுள்ள குழந்தைகளுக்கு ஊக்கத்தொகையும், கூட்டு மருந்து வாங்கிக்கொள்ள இலவச பேருந்து பயண அட்டை, உழவர் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் மாதாந்திர உதவித்தொகை, விதவை உதவித்தொகை, இலவச தையல் இயந்திரம், பசுமை வீடு திட்டம், தாட்கோ கடனுதவி, இலவச கால்நடைகள் வழங்குதல், அந்தோதயா அன்னயோஜனா உள்ளிட்ட சலுகைகள் வழங்கப்பட்டு வருகிறது.

கடந்த 2019ஆம் ஆண்டில் 148 நபர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது. நடப்பாண்டில் 90 நபர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகிறது. அதனடிப்படையில் முதலமைச்சாpன் விரிவான காப்பீடு அட்டை 2 நபர்களுக்கும், மாதாந்திர உதவித் தொகைக்கான ஆணைகள் 8 நபர்களுக்கும் வழங்கப்பட்டது.

பல விழிப்புணர்வு நிகழ்வுகளின் விளைவாக நமது மாநிலத்தில் கடந்த ஐந்து ஆண்டுகளில் கர்ப்பிணித் தாய்மார்களின் எச்.ஐ.வி. தொற்று 0.18 சதவிகிதமாக உள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளில் நமது பெரம்பலூர் மாவட்டத்தில் கர்ப்பிணித் தாய்மார்களின் தொற்று 0.00 ஆக உள்ளது. மேலும், நமது மாவட்டத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளாக கர்ப்பிணி தாயிடமிருந்து பிறக்கும் குழந்தைக்கு எச்.ஐ.வி. பாதிப்பு இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. சமுதாயத்தில் எச்.ஐ.வி.யால் பாதிக்கப்பட்ட நபர்களை புறக்கணித்தல் அல்லது ஒதுக்குதல் இல்லாமல் அவர்களை சகமனிதர்களை போல் அன்போடு அரவணைக்க வேண்டும் என தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் கீதாராணி, காசநோய் பிரிவு துணை இயக்குநர் நெடுஞ்செழியன், மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு அலகு திட்ட மேலாளா; அருள்குமார், எச்.ஐ.வி. உள்ளோர் கூட்டமைப்பு தலைவர் ஸ்ரீநாதன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!