Biological Crop Protection Training in Vegetable Crops on behalf of ATMA Project

பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் வட்டார விவசாயிகளுக்கு, காய்கறி பயிரில் உருவாகும், நோய்களையும், பூச்சிகளையும் கட்டுப்படுத்தும் முறைகள் குறித்த தொழில்நுட்ப பயிற்சி காணொளி காட்சி வாயிலாக, மாவட்ட வேளாண் இயக்குனர் கணேசன் தலைமையில் நடந்தது. பெரம்பலூர் ரோவர் வேளாண் அறிவியல் நிலைய வல்லுநர் திவ்யா இயற்கை முறையில் காய்கறி சாகுபடி, அங்கக பூச்சிக்கொல்லிகள், நோய் கொல்லி தயாரிப்பு, ரசாயண பூச்சிக் கொல்லி மருந்துகள் இல்லாத காய்கறிகள் அவசியம், அங்கக முறையில் சாகுபடி செய்யப்படும் விளைபொருட்களை சந்தைப்படுத்துதல் போன்றவை குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது. ஆலத்தூர் வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் பழனிசாமி நன்றி கூறினார். அனைத்து வட்டார வேளாண்மை இயக்குனர்கள், வேளாண் அலுவலர் அமிர்தவள்ளி, மற்றும் அட்மா திட்ட பணியாளர்கள் ஏற்பாடு செய்திருந்தனர்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!