BJP saying the police inspector was acting in Tirupur indecent demonstration of staggering!
திருப்பூரில் காவல் ஆய்வாளர் தரக்குறைவாக நடப்பதாக கூறி பாஜக வினர் ஆர்பாட்டம் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததையடுத்து கலைந்து சென்றனர்.
திருப்பூர் மத்திய காவல் நிலையத்தில் ஆய்வாளராக பணிபுரியும் சாலைராம் சக்திவேல் தன்னிடம் புகார் கொடுக்க வருபவர்களிடம் தரக்குறைவாகவும் ஒருமையிலும் பேசி வருவதாக தொடர் குற்றச்சாட்டு எழுந்து வந்தது. மேலும் அவர் பதவி ஏற்ற ஒன்றரை மாதத்தில் மத்திய காவல் நிலையத்தில் ஏராளமான குற்ற சம்பவங்களும் அரங்கேரியுள்ள நிலையில் மத்திய காவல் நிலையத்தில் புகார் அளிக்க சென்ற பாஜக பொருப்பாளர் முருகன் என்பவரை ஆய்வாளர் சாலைராம் சக்திவேல் தரக்குறைவாக பேசியும், கைபேசியை பிடுங்கி உடைத்தாகவும் குற்றம் சாட்டி மங்கலம் சாலையில் பாரதிய ஜனதா கட்சியினர் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும் ஆய்வளர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க கோரியும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் சாலைமறியலில் ஈடுபட முயன்றனர் அவர்களை தடுத்த உதவி காவல் ஆணையர் தங்கவேல் ஆய்வாளர் மீது நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததை அடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சற்று நேரம் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.