Breaking the lock of a grocery store in Perambalur and stealing cash and groceries: Traders fear!

பெரம்பலூர் நகராட்சிக்குட்பட்ட சிலோன் காலனி பகுதியில் வசிப்பவர் கிருஷ்ணசாமி(68). ஓய்வு பெற்ற அரசு பேருந்து ஓட்டுனரான இவர் துரைமங்கலம் 3 ரோடு பகுதியில் கடந்த சில வருடங்களாக மளிகை கடை நடத்தி வருகிறார்.

இந்த மளிகை கடையை பராமரித்து வரும் கிருஷ்ணசாமியின் மருமகன், வைத்தியலிங்கம்(40) நேற்று இரவு வழக்கம் போல் கடையை பூட்டி விட்டு சென்றவர், இன்று காலை கடையை திறப்பதற்காக. வந்து பார்த்த போது, சட்ட ரீதி பூட்டப்பட்டிருந்த பூட்டு உடைக்கப்பட்டு கடையில் வைத்திருந்த 27 ஆயிரத்து 340 ரூபாய் ரொக்க பணம், 5268 ரூபாய் மதிப்பிலான மளிகை பொருட்கள் திருடு போனது தெரிய வந்ததுள்ளது.

இதனால் அதிர்ச்சியடைந்த வைத்திலிங்கம் தனது மாமனாரிடம் கடையில் திருடுபோய் விட்டது என தகவல் தெரிவித்துள்ளார். அந்த தகவலைத் தொடர்ந்து கடைக்கு வந்து பார்த்து விட்டு, கிருஷ்ணசாமி சம்பவம் குறித்து பெரம்பலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

புகாரின் பேரில் பெரம்பலூர் போலீசார், தடயவியியல் நிபுணர்கள் மற்றும் துப்பறியும் நாய் உதவியுடன் சம்பவ இடத்தை பார்வையிட்டு ஆய்வு செய்து, தடயங்களை கைப்பற்றி வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர். நள்ளிரவு நேரத்தில் மளிகைக் கடையின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் ரொக்கப் பணம் மற்றும் மளிகை பொருட்களை திருடிச் சென்ற சம்பவம் பெரம்பலூர் நகர் வியாபாரிகள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!