bricklayer suicide at the family dispute near perambalur
பெரம்பலூர் அருகே உள்ள துறைமங்கலம் பகுதியை சேர்ந்தவர் பால்ராஜ் (வயது 48). கொத்தனராக பணிபுரிந்து வருகிறார். நேற்று குடிபோதையில் குடும்பத்தாரிடம் தகராறு செய்ததாக கூறப்படுகிறது.
இதில் மனமுடைந்து, பிளேடால் அறுத்து தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்து தகவல் அறிந்த பெரம்பலூர் போலீசார் சம்பவ இடத்திற்கு அடக்கம் செய்ய இருந்த பால்ராஜ் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். வழக்குப் பதிவு செய்த போலீசார் கொலையா! தற்கொலையா! என விசாரணை நடத்தி வருகின்றனர்.