Bus conductor tried to misbehave with the girls was arrested in perambalur near
பள்ளி மாணவிகளிடம் தவறாக நடக்க முயன்ற அரசு பஸ் கண்டக்டர் கைது செய்யப்பட்டார்.

பெரம்பலூர் மாவட்டம், குரும்பலூர் அருகே உள்ள பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் இளையபெருமாள் (வயது 55). இவர் பெரம்பலூர் டெப்போவில் அரசு டவுன்பஸ் கண்டக்டராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் கடந்த சில மாதங்களாக பெரம்பலூரிலிருந்து பிள்ளையார்பாளையம் செல்லும் டவுன் பஸ்சில் கண்டக்டராக உள்ளார். அப்போது அன்னமங்கலத்தில் உள்ள பள்ளியில் படிக்கும் மாணவிகள் பலர் இந்த டவுன் பஸ்சில் ஏறி வந்து அரசலூரில் இறங்குவது வழக்கம். அவ்வாறு தினசரி பள்ளி சென்று வரும் மாணவிகளிடம் இளையபெருமாள் தொடர்ந்து பலமுறை தவறாக நடந்துள்ளார்.

இதனை மாணவிகள் தங்களது பெற்றோர்களிடம் கூறியுள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த பெற்றோர்கள் இன்று மாலை பெரம்பலூரிலிருந்து அரசலூர் நோக்கி வந்த டவுன் பஸ்சை மறித்து இளையபெருமாள் மற்றும் அரசு பேருந்தையும் சிறைப்பிடித்தனர். தகவலறிந்து அரும்பாவூர் போலீசார் சம்பவ இடத்திற்க்கு விரைந்து வந்து கண்டக்டர் இளையபெருமாளை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் இரண்டு மணி நேரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2024 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!