Bus movement stopped: sit-in protest against the regime petition In Perambalur collectorate take no action at all
பெரம்பலூர் அருகே கடந்த ஒரு மாதமாக பேருந்துகள் இயக்கப்படாததால் பொதுமக்கள், மாணவர்கள் பள்ளி செல்ல கடும் அவதிபட்டு வருவதாகவும் கொடுக்கப்பட்ட மனுவிற்கு நடவடிக்கை எடுக்காத மாவட்ட ஆட்சியரை கண்டித்து அலுவலக வாயிலில் பொதுமக்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பெரம்பலூர் மாவட்டம், மேலப்புலியூர் அருகே உள்ள திருப்பெயர் கிராமத்தில் வசூல் குறைவாக உள்ள காரணத்தால் இயக்கப்பட்டு அரசு மற்றும், தனியாருக்கு சொந்தமான மினி பேருந்துகள் இயக்குவது கடந்த ஒரு மாதமாக முற்றிலும் நிறுத்தம் செய்யப்பட்டு விட்டது.
இதனால் அப்பகுதியில் இருந்து பெரம்பலூருக்கு பள்ளி, கல்லூரி மாணவர்கள், நோயாளிகள், பொதுமக்கள் வந்து செல்ல கடும் அவதிப்பட்டு வருகின்றனர். பெரம்பலூர் வந்து செல்ல அருகே உள்ள கிராமமான மேலப்புலியூர், ஆலம்பாடி சென்று பேருந்து ஏறி செல்ல வேண்டிய நிலை உள்ளது.
இதுகுறித்து கடந்த வாரம் பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் நந்தக்குமாரிடம் மனு கொடுத்து உரிய நடவடிக்கை எடுத்து தங்களது சிரமத்தை குறைக்க வேண்டுமென கோரிக்கை விடுத்து இருந்தனர். ஆனால், மாவட்ட ஆட்சியரோ உரிய நடவடிக்கை எடுக்க காலம் தாழ்த்துவதாக கூறி மாவட்ட ஆட்சியர் அலுவலக நுழைவு வாயிலின் முன்பு அமர்ந்து அரைமணி நேரம் தர்ணா போராட்டம் நடத்தினர்.
இது குறித்து தகவல் அறிந்த அதிகாரிகள் பொதுமக்களிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தி ஓரிரு நாட்களில் பிரச்சனைக்கு உரிய தீர்வு அளிப்பதாக உறுதி அளித்ததின் பேரில் கலைந்து சென்றனர். மாவட்ட ஆட்சியர் உரிய நடவடிக்கை எடுக்காதபட்சத்தில் பெரம்பலூர் – துறையூர் சாலையில் மறியல் போரட்டம் நடத்தப்போவதாக அறிவித்துள்ளனர்.