Can Raja tell the media why Alagiri slapped A.Raja at the airport? R.T. Ramachandran Question!

இன்று பெரம்பலூரில் செய்தியாளர்களை சந்தித்த பெரம்பலூர் அதிமுக மாவட்ட செயலாளரும், குன்னம் தொகுதி எம்.எல்.ஏவுமான ஆர்.டி. ராமச்சந்திரன் தெரிவித்ததாவது:

அனைத்து இந்திய அண்ணா திராவிட கழகத் தலைவர்களையும், இந்தக் கழகத்தை கட்டிக் காத்து, மகளிர் முன்னேற்றத்திற்காக பல திட்டங்களை தந்து பாரதி கண்ட புதுமைப் பெண்ணாக, ஆண்களுக்கு நிகர் பெண்கள் என்ற நிலையை தமிழகமெங்கும் உயர்த்தி, பெண்களுக்கு பல முன்னேற்றத்தை தந்த இதயதெய்வம் புரட்சித் தலைவி அம்மா அவர்களை பற்றியும், நல்லாட்சி புரிகின்ற நமது முதலமைச்சர் எடப்பாடியார் அவர்களைப் பற்றியும், தரக்குறைவாக திமுக தலைவர்கள் மற்றும் அந்தக் கட்சியின் முன்னாள் மத்திய அமைச்சர், ஸ்பெக்ட்ரம் புகழ் ராஜா, தரைக்குறைவாக ஒருமையில் பேசி, அ.இ.அதிமுக தொண்டர்களின் உணர்வவை தூண்டி விட்டு, தமிழகத்தில் கலவரத்தை உண்டுபண்ணி, அதிமுகவிற்கு அவப்பெயரை ஏற்படுத்த வேண்டும் என்ற எண்ணத்தோடு, பேட்டிகளை கொடுத்து வருவதை கண்டித்து, பெரம்பலூர் மாவட்டத்தில் பிறந்த ராஜாவிற்கு, பெரம்பலூர் மாவட்ட்த்தில் இருந்தே, எதிர்வினையை கொடுக்க வேண்டும் என்பதற்காக அழைத்திருக்கிறேன். அரசியலில் பொதுமக்களிடம், ஆளுகின்ற அரசு எந்த திட்டத்தை செய்ய தவறிவிட்டது, அல்லது, எந்த திட்டத்தில் என்ன தவறை செய்திருக்கிறது, அல்லது மக்களுக்கு, செய்யக்கூடிய துரோகம் என்ன என்பதை மக்களிடம் இது போன்ற ஊடகங்களில் எடுத்துரைத்து, மக்களின் செல்வாக்கை பெற்று, அரசியல் செய்வது நாகரீகம். அதைவிடுத்து, தாங்கள் திமுக தலைவர் ஸ்டாலின் அவர்களும், அவரது புதல்வன் உதயநிதி அவர்களும், மக்கள் செல்வாக்கை இழந்து வருவதை மறைத்து, இந்த தொடர் புயலால், மக்கள் பாதிப்பில் இருந்து மக்களை காக்கக் கூடிய, அதே போன்று, கொரானா காலங்களில், மக்களை நேரில் சென்று சந்தித்து, மக்கள் நிலையை அறிந்து, பணியாற்றக் கூடிய அஇஅதிமுக முதலமைச்சர் மற்றும் அதிமுக தொண்டர்கள் அமைச்சர்கள், சட்ட மன்ற உறுப்பினர்களின் செயல்பாடுகளை மக்களிடம் இருந்து திசை திருப்புவதற்காகவும், இப்படி மக்களை சந்திக்கின்ற அதிமுக கட்சியினர் முன்னிலையில் மக்களை சந்திப்பதற்கு திறன்யின்றி அல்லது தன் சுயநலத்தோடு, தனக்காக உயிரையே தரக்கூடிய திமுக தொண்டனின் திருமணத்தை கூட, தனது இல்லத்தில் அமர்ந்து கொண்டு கம்யூட்டர் மானிட்டர் திரைக்கு அட்சதையை தூவி, ஆசீர்வாதம் செய்யக் கூடிய, கையாலாகத மக்கள் நலன் கருதாத, தனக்கு உயிரைத் தரக் கூடிய தொண்டர்களின் மனதை உணராத திமுக தலைவரின் செயலிழப்பு தன்மையை செயலற்ற தன்மையை வக்கற்ற தன்மையை, மக்கள் சிந்திக்க கூடாது என்பதற்காகவும், அதிமுக ஆட்சியில், குறைகளை சுட்டிக் காட்டி, மக்களிடம் எடுத்துச் செல்ல வழியில்லாததாலும், எந்தக்குறையும் இல்லை, அந்தக் குறைகளை கண்டறிந்து மக்களுக்கு திராணியில்ராமல், வக்கில்லாமல், துண்டு சீட்டில், எழுதி கொடுக்கக்கூடியதை ஒழுங்காக படிக்க முடியாத தலைவனை தலைமையாக கொண்டிருக்கிற ராஜா, மக்களை திசை திருப்புவதற்காகவும், தமிழகத்தில், கலவரத்தை தூண்டுவதற்காகவும், தி.மு. கழகத்தில் ராஜா அவர்களை ஏவிவிட்டு இப்படி ஒரு கீழ்த்தரமான வார்த்தைகளை பயன்படுத்தி, மறைந்த முதலமைச்சரையும், இப்பொழுது ஆட்சி செய்கின்ற முதலமைச்சரையும், ஒரு தலைபட்சமாக ஒருமையில் பேசி வருவதை பெரம்பலூர் அஇஅதிமுக மாவட்ட கழகத்தின் சார்பாக முதலில் வன்மையாக கண்டிக்கின்றேன். தவழ்ந்து தவழ்ந்து வருகிறோம், தவழ்ந்து தவழ்ந்து பதவி பெற்றவர் என்று உதயநிதி ஸ்டாலினும், அவர் வயதுக்கு மீறி புரட்சித் தலைவி அம்மாவின் வழியில் வந்தவர்களையெல்லாம், கேவலப்படுத்துகிறார்கள். எங்களுக்கு உயிர் கொடுத்த, எங்களை பெற்றெடுத்த தாயின் கால்களை, பாதத்தை, தொட்டு வணங்குவது எங்களது வழக்கம். தமிழகத்தின் பாரம்பரியம். அதே போன்று, தன் வாழ்க்கையில், உயர்வு கொடுத்தவர்களை உயர்த்துபவர்களை வணங்குவதற்காக அவர்களின் காலை தொட்டு கும்பிடுவது எங்களது வழக்கம். அப்பத்தான் நானும் கூட எனக்கு வாழ்வளித்த அரசியிலில் வாழ்வளித்து புரட்சித் தலைவி அம்மா அவர்களின் காலையும் தொட்டு வணங்கி இருக்கிறேன். அதற்கு வழி வகுத்து கொடுத்து எங்களது கழக துணை ஒருங்கிணைப்பாளர் அண்ணன் வைத்திலிங்கம் காலையும் தொட்டு வணங்கியிருக்கிறேன். ஆக நான், குனிந்து காலை தொட்டு வணங்குவது எனக்குத் தெரியும். ஆனால், இதை ஏதோ நக்கி நக்கி என்று, பலமுறை கொச்சைப் படுத்தும் வகையாக பேசிய ராஜாவை கேட்கிறேன். பெரம்பலூரில், நீங்கள் என்ன தொழில் செய்து இவ்வளவு கோடி சம்பாதியத்தை லேண்ட் ரோவர் காரில் செல்லுகின்ற அளவிற்கு உங்கள் தரத்தை உயர்த்தியிருக்கிறீர்கள். இங்கு இருக்கக் கூடிய சொத்துக்கள் எப்படி வந்தது. ஒரு சீனியர் வழக்கறிஞரிடம் சம்பளத்திற்கு வேலை செய்த ராசா இப்பொழுது ஆண்டிமுத்து சின்னப்பிள்ளை அறக்கட்டளை அமைத்து தேர்தலில் அறிவித்திருக்க கூடியவை என்ன தொழில் செய்து வந்தன. நீங்கள் பெரம்பலூர் எம்.பியாக ஆவதற்கு தற்போது முதன்மைச் செயலாளராக இருக்க கூடிய திருச்சி நேருவின் வீட்டு வாசலில், காவல் கிடந்து நேருக்கு கால் நிலைக்காலை தாண்டிய உடன் நீங்கள் காலில் விழுந்தை எப்படி சொல்வது, ராஜாவும், முதன்மைச் செயலாளர் காலை நக்கித்தான் எம்.பி வேட்பாளர் ஆனாரா என்பதை ராசா விளக்க வேண்டும். எம்.பி ஆன பிறகு நேருவை உதறித்தள்ளி, டெல்லியில் சென்று முரசொலி மாறனின் காலில் அமர்ந்து கொண்டு, அவர் காலை நக்கித்தான் நீங்கள் அமைச்சர் பதவியை அடைந்தீர்களா! என்பதையும் ராசா சொல்ல வேண்டும். அதுமட்டுமல்ல திமுகவில் நிரந்த இடம் தேடுவதற்காக கருணாநிதியின் மகள் கனி மொழியின் தாய் ராசாத்தி ஆதரவோடு, அவர் காலில் விழுந்தது, அவர் பாதத்தை நக்கித்தான் நீங்கள் இந்த கழகத்தில் உயர்ந்து கருணாநிதியின் மனதில் இடம் பிடித்தீர்களா என்பதையும் ராஜா அவர்கள் சொல்ல வேண்டும். அது மட்டுமல்லாமல், திமுகவில் தலைமை பொறுப்பிற்கு வந்து , ஸ்டாலின், அழகிரியை ஏமாற்றுவதற்காக கனிமொழியை கட்சியின் தலைமை ஆக்குவற்காக திட்டமிட்டு கனிமொழியை முன்னிலைப்படுத்தி கட்சியிலும், குடும்பத்திலும், குளறுபடி ஏற்படுத்தியை உணர்ந்துதானே அந்த திமுக-வில் ஸ்டாலின் அவர்கள் உங்களை புறக்கணித்து இருந்தார். இப்படி நாங்களெல்லாம், காலில் விழுந்து, எங்களின் குருநாதர்கள், மரியாதை செலுத்தக் கூடியவர்களை காலை தொட்டு வணங்குவது வழக்கமாக வைத்திருக்கிறோம் அதிமுகவில்.. ஆனால், நீங்களெல்லாம் ராஜா ஒவ்வொருவிடமும் ஒவ்வொரு முறையும் விழும்பொழுது ஒரு வேளை நீங்கள் சொன்னது போல அவர்களை நக்கித்தான் இந்த இடத்திற்கு வந்திருக்கீர்கள் என்று நான் நினைக்கிறேன். அது மட்டுமல்ல, ஸ்டாலின் அவர்களை பார்த்து கேட்கிறேன். ராஜாவோடு பேட்டிக்கு, போட்டிக்கு அழைக்கிறீர்கள், ஏன் அரோடு, தயாராக இல்லை. எங்கள் கழகத்தில் எத்தனையோ, தொண்டர்கள் அவருக்கு பதிலளிக்க தயராக இருக்கிறார்கள், ஸ்டாலின் அவர்களை கேட்கிறேன், பேசிக் கொண்டிருக்கிறேன், மனதில் உள்ள உணர்வுகளை, கட்சி மீது உள்ள பற்றுகளை எந்த துண்டு சீட்டும் இல்லாமல் சொல்லிக் கொண்டிருக்கிறன், துண்டு இல்லாமல் உங்களால் பேசமுடியமா! ஒரு கழகத்தின் தலைவரை போட்டிக்கு அழைத்து, மற்றொரு கழகத் தலைவர் போட்டிக்கு அழைத்தால் அது தகுதி, ஆனால், அவையிலேயே சட்டமன்றத்தில் அமர்ந்திருக்கின்ற ஸ்டாலின் அருகாமையில் உள்ள துரைமுருகனிடம், என்ன நடந்தது என்று கேட்டு விட்டு அப்புறம் தான் பதிலளிப்பார். இப்படி அவையில் அமர்ந்திருக்கும் போது, முதலமைச்சருக்கு பதிலளிக்க முடியாத ஸ்டாலின், வாசலில் கட்டி போட்டிருக்கக் கூடிய நாய்க்கு சமமான தொண்டர்களை, ராஜாவை விட்டு முதலமைச்சரை போட்டிக்கு அழைக்கறீர்கள், உங்களுக்கு தில் இருந்தால், திராணி இருந்தால், நீங்கள் இனி வருகின்ற, ஊடக சந்திப்புகளிலோ, சட்டமன்றத்திலோ, அல்லது வீட்டில் அமர்ந்து ஆன்லைனில், கம்யூட்டரில் பேசும் போதாவது, துண்டு சீட்டு இல்லாமல், மக்களின் கருத்துகளை, தேவைகளை, உங்களால் எடுத்துரைக்க முடியுமாக என்பதை உங்களுக்கு பெரம்பலூர் அதிமுக சார்பில் மாவட்ட செயலாளர் கேள்வி விடுக்கிறேன். தம்பி உதயநிதி ஸ்டாலின் ஒரு கட்சியில் கீழ்மட்டத்தில் வளர்வது என்பதை பொதுச்செயலாளர் அண்ணன் துரைமுருகனிடம் கேட்டு தெரிந்து கொள்ள வேண்டும் என்பதையும் தெரிவித்தார். மேலும்,

விமான நிலையத்தில் அழகிரி எதற்கா அறைந்தார் என்பதையும், ஊடகங்களில் சொல்ல முடியுமா, ராஜா இது போன்று அரசியலில் பேசுவது அநாகரீகத்தை காட்டுகிறது, தமிழகத்தில் உள்ள பெண்கள் இதை கூர்ந்து கவனித்து கொண்டிருக்கிறார்கள் என்றும், ராஜாவிற்கும், ஸ்டாலினிற்கும் சொல்லுகிறேன், உங்களுக்கு திராணி இருந்தால் மக்கள் மீது நம்பிக்கை இருந்தால், வருகின்றன 2021 சட்ட மன்ற தேர்தலில் நீங்கள் செய்த மக்கள் நலத்திட்டங்களை, எடுத்துரையுங்கள். ராசாவை இரு கட்சி தொண்டர்களும் அறிவர் என பேசினார். அப்போது நகரச் செயலாளர் ராஜபூபதி, வேப்பந்தட்டை கிழக்குஒன்றிய செயலாளர் ரவிச்சந்திரன் உள்ளிட்ட கட்சி பிரமுகர்கள் பலர் உடனிருந்தனர்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!