Can the people of DMK call PRESS and give an interview that I will be the Chief Minister! R.T. Ramachandran MLA challenge !!

பெரம்பலூரில் அதிமுக மாவட்ட இளைஞர் மற்றும் இளம் பெண்கள் பாசறை உறுப்பினர் சேர்கை மற்றும் ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட செயலாளர் ராமச்சந்திரன் எம்எல்ஏ தலைமை வகித்தார். பெரம்பலூர் எம்எல்ஏ தமிழ்ச்செல்வன் முன்னிலை வகித்தார்.

கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக அதிமுக இளைஞர் மற்றும் இளம் பெண்கள் பாசறை மாநில செயலாளர் பரமசிவம் கலந்து கொண்டு பேசுகையில், இன்றைய இளைஞர், இளம் பெண்கள் தான் நாளை கட்சியின் நிர்வாகிகள். ஆட்சியில் உள்ள போது இளைஞர்களை கண்டுகொள்ளாத திமுக கட்சி தற்போது தேர்தல் நேரத்தில் இளைஞர்களுக்கு பதவி தருவதாக கூறி அழைப்பது ஏமாற்று வேலை.

இந்தியாவிலேயே ஜனநாயக மிக்க மக்கள் கட்சி அதிமுக கட்சி தான். திமுகவில் தலைவர்கள் அடுத்த, அடுத்த குடும்ப வாரிசு உண்டு. ஆனால் அதிமுக கட்சியில் தொண்டர்கள் மட்டுமே வாரிசு, திமுகவில் கட்சி தலைவர்களுக்கு மட்டுமே பதவி, அதிமுக கட்சியில் தொண்டர்களுக்கும் பதவி வழங்கப்படுகிறது. ஆகையால் அதிமுகவினர் அதிமுகவின் செயல்பாடுகளையும், திட்டங்களையும் பொதுமக்களிடம் எடுத்து கூறி வரும் சட்டசபை தேர்தலில் அதிமுக வெற்றிப்பெற அனைவரும் பாடுபடவேண்டும் என்றார்.

முன்னதாக பேசிய மாவட்ட செயலாளரும், குன்னம் எம்.எல்.ஏ., ஆர்.டி.ராமச்சந்திரன் பேசியதாவது:

அதிமுக இருக்கும் ஜனநாயகம் திமுகவில் இல்லை. நான் கூட ஒரு நாள் சி.எம் ஆவேன் என பேட்டி கொடுக்க முடியும். புதிதா கட்சியில் இணைய இருக்கும் நீங்கள் கூட நாளை சி.எம். ஆக வாய்ப்பு உள்ளது. 2026 -ல் நான் சி.எம்.ஆவேன் என அக்கட்சியின் முக்கிய பொறுப்பில் உள்ள துரை.முருகன் பேட்டி கொடுக்க முடியுமா.. அல்லது வேறு யாராவது திமுகவினர் பிரஸ்காரனை கூப்பிட்டு நான் சி.எம். ஆவேன் பேட்டி கொடுக்க முடியுமா என சவால் விடுத்தார். திமுக குடும்ப கட்சி. அங்கு கொத்தடிமையாக தலைமுறை தலைமுறையாக கட்சியில் கிடக்க வேண்டியதுதான். கருணாநிதிக்கு பிறகு ஸ்டாலின், ஸ்டாலினுக்கு பிறகு, அவரது மகன், பேரன் என கட்சி தலைமை நடக்கும். ஆனால், அதிமுகவில் அப்படி அல்ல, அடிப்படை கிளை செயலாளர் கூட முதலமைச்சர் ஆகலாம் என்பதற்கு தற்போதைய முதலமைச்சரே சாட்சி என பேசினார்.

கூட்டத்தில் மாநில மீனவர் அணி இணை செயலாளர் தேவராஜன், நகர செயலாளர் ராஜபூபதி, ஒன்றிய செயலாளர்கள் செல்வகுமார், கர்ணன், கிருஷ்ணசாமி, சிவப்பிரகாசம், மாவட்ட நிர்வாகிகள் ராணி, ராஜேஸ்வரி, வீரபாண்டியன், வக்கீல் பாலமுருகன், கருணாநிதி, பெருமாள், குரும்பாபாளையம் சி.நாகராஜன், உட்பட ஆயிரக்கணக்கானோர் பலர் கலந்து கொண்டனர். முன்னதாக மாவட்ட பாசறை செயலாளர் இளங்செழியன் வரவேற்றார். முடிவில் மாவட்ட பாசறை இணை செயலாளர் புவனேஸ்வரி நன்றி கூறினார்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!