Candidates who are writing the exam in the coming months of September, October, Govt 19 Test is required!

பெரம்பலூர் கலெக்டர் வே.சாந்தா விடுத்துள்ள தகவல்

பெரம்பலூர் மாவட்டத்தில் வரும் செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் தேர்வுகளை எழுதவுள்ள, சொல்வதை எழுதுபவர் சலுகை கோரி விண்ணப்பித்த மாற்றுத்திறனாளி தேர்வர்கள் மற்றும் சொல்வதை எழுதுபவர்கள் ஆகியோருக்கு கோவிட் – 19 பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என ஆணை வெளியிடப்பட்டுள்ளது.

எனவே, நடைபெறவுள்ள எட்டாம் வகுப்பு தனித் தேர்வர்களுக்கான தேர்வு, பத்தாம் வகுப்பு, மேல்நிலை முதலாமாண்டு , இரண்டாமாண்டு துணைத் தேர்வுகள் மற்றும் தொடக்கக் கல்வி பட்டயத் தேர்வுகளை எழுதவுள்ள மாற்றுத்திறனாளித் தேர்வர்களில் சொல்வதை எழுதுபவர் வேண்டிய சலுகை கோரி விண்ணப்பித்த மாற்றுத்திறனாளித் தேர்வர்கள் தேர்வு எழுதுவதற்கு முன்னர், அவர்களின் விருப்பத்தின் பேரில் தங்கள் அளவிலேயே கோவிட் – 19 பரிசோதனை மேற்கொள்ளலாம். அல்லது கோவிட் – 19 பரிசோதனையை மேற்கொள்வதில் ஏதேனும் சிரமம் இருந்தால் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்தை 7010939925 என்ற அலைபேசி எண்ணிற்கு வரும் செப்.15 க்குள் தோடர்பு கொண்டால் பரிசோதனை மேற்கொள்ள உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

சொல்வதை எழுதுபவர் சலுகை கோரும் மாற்றுத்திறனாளிகள் கோவிட் 19 தொற்று இல்லை என்பதற்கான மருத்துவச் சான்றினை தேர்வு மையத்திற்கு வருகை புரியும்போது உடன்கொண்டு வரவேண்டும் என தெரிவித்துள்ளார்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!