Car collision near Perambalur: Cow killed!
பெரம்பலூர் மாவட்டம், திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் இன்று காலை பசுமாடு மீது கார் மோதிய விபத்தில் பசுமாடு பரிதாபமாக உயிரிழந்தது.
விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே உள் பெரிய தச்சூரை சேர்ந்தவர் ராஜேந்திரன் மகன் பாஸ்கர்(45) தனியார் காரில் டிரைவராக உள்ளார். விருதுநகர் நோக்கி காரை ஓட்டி சென்றார். வெள்ளாறு பாலம் அருகே வந்து கொண்டிருந்தபோது இன்று காலை சுமார் 8.40 மணி அளவில் எதிர்பாராத விதமாக பசு மாடு சாலையை ஒன்று கடக்க முயன்றது. அப்போது முன்னால் சென்றுக் கொண்டிருந்த லாரி மாட்டிடம் இருந்து ஒதுங்கவே, பின்னால் வந்த கார் பசுமாடு மீது மோதியது. இதில் மாடு சம்பவ இடத்திலேயே பலியானது. காரின் முன்பகுதி பலத்த சேதமடைந்தது. பின்னர் மாட்டின் உரிமையாளர் திருமாந்துறையை நேர்ந்த ராஜேந்திரன் மகன் ராஜா (39) என்பவர் கார் உரிமையாளரிடம் முறையிட்டதன் பேரில், சுங்கச் சாவடி மாடு குறுக்கே விட்டது தவறு என்பதால், சமசரம் பேசி இழப்பீட்டுத் தொகை சுமார் ரூ. 5 ஆயிரம் பெற்றுக் கொண்டார்.
தேசிய நெடுஞ்சாலையில் மாடுகள் உலவ விடக்கூடாது என்ற விதி இருந்தும், மாடு வளர்ப்போர்களின் கவனக்குறைவால் இது போன்ற விபத்துகள் ஏற்படுகின்றன. நல்ல வேளையாக காரில் வந்தவர்களுக்கு எந்த உயிர்ச்சேதமும் ஏற்படவில்லை. பின்னால், வந்த வாகன ஓட்டிகள் விழிப்புடன் செயல்பட்டதால் தொடர் விபத்துகள் தவிர்க்கப்பட்டது.
சுங்கச் சாவடி நிர்வாகம் கட்டணம் வசூலிக்கும் காட்டும் ஆர்வத்தை போல விபத்துகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.