Car crashes into truck near Perambalur due to bumpy road; Luckily they escaped with minor injuries!

சேலம் மாவட்டம், வாழப்படி அருகே உள்ள குமாரபாளையத்தை சேர்ந்தவர் முன்னாள் ஊராட்சித் தலைவர் கோவிந்தராஜ்.

பெரம்பலூர் மாவட்டம், துங்கபுரம் அருகே உள்ள குலதெய்வம் கோயிலுக்கு செல்வதற்காக மகன், மருமகள், பேரக்குழந்தைகளுடன் இன்று காலை 6 மணிக்கு மாருதி 800 காரில் ஆத்தூர் வழியாக புறப்பட்டார்.

கார் பெரம்பலூர் – ஆத்தூர் சாலையில், சோமண்டாப்புதூர்ர் பிரிவு – மலைப்பாதை பிரிவு இடையில் வந்த போது சாலை மேடுபள்ளமாக இருந்ததால், கார் எதிரே சேலம் மாவட்டம், கெங்கவள்ளிக்கு ஜல்லி ஏற்றி சென்ற டிப்பர் லாரி முன்சக்கரத்தின் மீது மோதியது. லாரி சமயோசித்தமாக செயல் லாரியை தள்ளி நிறுத்தினர். லாரியில் மோதிய கார் ஒரு சுற்று சுற்றி, வந்த பாதையை நோக்கி திரும்பி நின்றது.

வழிபோக்கர்கள் விபத்தில் சிக்கியவர்களை மீட்டு பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். புறநோயளிகளாக சிகிச்சை பெற்றனர். இது குறித்து தகவல் அறிந்த பெரம்பலூர் போலீசார், எஸ்.எஸ்.ஐ புவனேஸ்வரி தலையிலான போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணையை நடத்தி வருகின்றனர்.

மோசமான ஆத்தூர் – பெரம்பலூர் சாலையை மேடுபள்ளங்களை சீரமைப்பதோடு, விபத்துக்களை தவிர்க்க சாலையை அகலப்படுத்தி தற்போதைய வாகனப் பெருக்கத்திற்கு ஏற்ப சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!