Car – Scooty – Minibus collision at Perambalur signal! Request to dispose of the construction workers who are standing in the way!

பெரம்பலூர் காமராஜர் வளைவு பகுதியில் சிக்னல் இயங்கி வருகிறது. இதன் வழியாக பெரம்பலூர் பழைய பேருந்து நிலையம், துறையூர், ஆத்தூர், வடக்குமாதவி, எளம்பலூர் மார்க்கம் மற்றும் புதிய பேருந்து நிலையம் வழியாக வரும் வாகனங்கள் கடந்து செல்கின்றன. இன்று காலை சுமார் 9.10 மணி அளவில் , சிக்னலில் , பெரம்பலூரில் இருந்து சித்தளிக்கு சென்ற தனியார் மினிபஸ், ஸ்கூட்டி, கார் ஆகியவை அடுத்தடுத்து மோதிக் கொண்டது, இதில் ஸ்கூட்டி மினிபஸ் முன்புறம் சிக்கி கொண்டது. ஸ்கூட்டியில் வந்தவர் சிறுகாயங்களுடன் உயிர் தப்பினார். காரின் பின்பகுதியும் சேதமானது.

இது குறித்து தகவல் அறிந்த பெரம்பலூர் போலீசார் இன்ஸ்பெக்டர் முருகேசன் தலைமையில், விபத்தில் சிக்கிய வாகனங்களை மீட்டு, போக்குவரத்தை சீர் செய்தனர். இதனால், அப்பகுதியில் சுமார் ஒரு கால் மணி நேரம் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. பள்ளி கல்லூரி செல்லும் வாகனங்கள் உள்பட ஏராளமான வாகனங்கள் அணிவகுத்து நின்றது.

காமராஜர் வளைவு பகுதியில் காலையில் இருந்தே கட்டிட பணிக்கு செல்லும் தொழிலாளர் வேலைக்காக அங்கே பெருங்கூட்டமாக திரளுவதால், காமராஜர் வளைவு சிக்னலில், சாலையில் வாகனங்கள் செல்ல இடமில்லாததால் அடிக்கடி இது போன்ற விபத்துக்கள் ஏற்படுகின்றன. இவர்களுக்காக, அரசு சார்பில் புதிய பேருந்து நிலையம், மற்றும் வானொலி திடல், தாசில்தார் ஆபிஸ் காலியிடங்களை பயன்படுத்தக் கோரி அறிவுறுத்தியும், அங்கே செல்லாததால் விபத்துகள் தொடர்ந்த வண்ணம் உள்ளன.

எனவே, கட்டிட தொழிலாளர்கள் பொக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்துவதையும், விபத்துகளை தவிர்க்க காமராஜர் வளைவு பகுதியில் பெருங்கூட்டமாக நிற்க தடை விதிக்க வேண்டும், மேலும், நூற்றுக்கணக்கான வாகனங்களை ஓரே இடத்தில் நிறுத்துவதால் வாகன ஓட்டிகளுக்கு சிரமம் ஏற்படுவதை கருத்தில் கொண்டு, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுத்து, போக்குவரத்தை சீர் செய்வதோடு, விபத்தில்லாமல் சிக்னலை மக்கள் கடக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!