Chain snatched from woman who came to garbage in Perambalur

கற்பனை காட்சி
பெரம்பலூர் எளம்பலூர் சாலையில் உள்ள முத்துநகரைச் சேர்ந்தவர் சுந்தரபாண்டியன். கார் சொந்தமாக வைத்து வாடகைக்கு விட்டு வருகிறார். இவரது மனைவி கவிதா (வயது 35). இன்று காலை சுமார் 8 மணி அளவில் வீட்டில் இருந்த குப்பையை கொட்ட அருகில் இருந்த குப்பைத் தொட்டிக்கு வந்துள்ளார். அப்போது அங்கு பைக்கில் வந்த இரு வாலிபர்கள் கவிதாவின் கழுத்தில் இருந்த 7 பவுன் தாலிக்கொடியை பறித்தனர். அப்போது கவிதா தாலிக்கொடியின் ஒரு பகுதியை இறுக்கமாக பிடித்து கொண்டு கூக்குரலிட்டார், ஆனால் கொள்ளையர்கள் விடாமல் பலம் கொண்டு இழுத்தனர். அதில் சுமார் 3 பவுனுக்கு மேலான கொடி அவர்கள் கையில் அறுந்த நிலையில் கிடைத்தவுடன் பைக்கில் மின்னல் வேகத்தில் தப்பினர். இது குறித்து தகவல் அறிந்த போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதி பெண்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.