Check Dam at a cost of Rs 31 crore; Is overloaded; The farmers thanked the Government of Tamil Nadu and MLA RT Ramachandran.

குன்னம் தொகுதிக்கு உட்பட்ட செந்துறை அருகே வெள்ளாற்றில் புதிதாக தமிழக அரசு சார்பில் ரூ.31 கோடி மதிப்பில் கட்டப்படட தடுப்பணை ஆடிமாதத்தில் நிரம்பியது. இதனை கண்ட விவசாயிகள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள ஆலத்தியூர் பகுதியில் உள்ள வெள்ளாற்றில் புதிய தடுப்பணை கட்ட வேண்டும் என்று அப்பகுதி விவசாயிகள் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வந்தனர். அதனைத்தொடர்ந்து, குன்னம் எம்எல்ஏ ஆர் டி ராமச்சந்திரன் வெள்ளாற்றில் தடுப்பணை கட்ட வேண்டும் என்று தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி இடம் கோரிக்கை விடுத்தார். அதனை தொடர்ந்து தமிழக முதலமைச்சர் வெள்ளாற்றில் தடுப்பணை கட்ட ரூ. 31 கோடி ரூபாய் நிதி ஒதுக்கி உத்தரவிட்டார்.

அதன்படி கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெள்ளாற்றில் தடுப்பணை கட்ட முன்னாள் ஒன்றிய செயலாளர் முள்ளுக்குறிச்சி சுரேஷ் அடிக்கல் நாட்டினார். தற்போது தடுப்பணை கட்டும் பணி முடிவடைந்தது. இந்த நிலையில் கடந்த சில நாட்களாக செந்துறை பகுதியில் ஆடி மாதத்தில் பெய்த தொடர் மழையால், மழைநீர் ஆணைவழி ஓடை உள்ளிட்ட காட்டாறுகளில் பெருக்கெடுத்து ஓடி வந்து வெள்ளாற்றில் கலந்தது. இந்த மழைநீர் வெள்ளாற்றில் கட்டப்பட்டுள்ள தடுப்பணையில் தேங்கி கடல் போல் காட்சியளிக்கிறது.

ஆடிப்பெருக்கு அன்று வெள்ளாற்று தடுப்பணையில் நிரம்பி வழியும் தண்ணீரை அப்பகுதி பொதுமக்களும் விவசாயிகளும் ஆர்வமுடன் கண்டு மகிழ்ச்சி அடைந்ததோடு, அப்பகுதி மக்களின் 50 ஆண்டுகால கோரிக்கையை நிறைவேற்றிய தமிழக அரசுக்கும் குன்னம் எம்எல்ஏ ஆர்டி ராமச்சந்திரனுக்கும் நன்றி தெரிவித்துள்ளனர்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!