Chess match for Perambalur district champions will be held on July 25.

சென்னையில் நடைபெறவுள்ள 44வது ஒலிம்பியாட் சதுரங்கப் போட்டியினை காண்பதற்காக பெரம்பலூர் மாவட்டத்திலுள்ள 4 கல்வி வட்டார அளவில் நடைபெற்ற செஸ் போட்டியில் 1168 மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.

உலகத்தின் தலைசிறந்த கிராண்ட் மாஸ்டர்கள் பங்கேற்க உள்ள ஒலிம்பியாட் போட்டிகளை அரசுப் பள்ளி மாணவ, மாணவிகள் பார்வையிடுவதற்கு பெரம்பலூர் மாவட்டத்தில் 359 பள்ளிகளில் அளவில் ஆண்கள் மற்றும் பெண்களுக்கான செஸ் போட்டிகள் நடந்தது. இதில் 38,600 மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். 1168 மாணவ, மாணவிகள் வட்டார அளவிளான நடைபெறும் போட்டிக்கு தேர்வானர்கள்.

வேப்பூர் கல்வி மாவட்டத்தில் 356 மாணவ, மாணவிகளுக்கான செஸ் போட்டி குன்னம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியிலும், பெரம்பலூர் கல்வி மாவட்டத்தில் 248 மாணவ, மாணவிகளுக்கான செஸ் போட்டி குரும்பலூர் அரசு மேல்நிலைப்பளியிலும், ஆலத்தூர் கல்வி மாவட்டத்தில் 282 மாணவ, மாணவிகளுக்கான செஸ் போட்டி பாடாலூர் அரசு மேல்நிலைப்பள்ளியிலும், வேப்பந்தட்டை கல்வி மாவட்டத்தில் 298 மாணவ, மாணவிகளுக்கான செஸ் போட்டி வேப்பந்தட்டை அரசு மேல்நிலைப்பள்ளியிலும், என மொத்தம் 1168 மாணவ, மாணவிகளுக்கான வட்டார அளவிலான போட்டி நடைபெற்றது.

ஒவ்வொரு வட்டாரத்திற்கும் 18 நபர்கள் என 4 வட்டாரத்திற்கும் 72 நபர்கள் தேர்வு செய்யப்ட்டுள்ளனர். இவர்களுக்கான இறுதிப் போட்டி பெரம்பலூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் 25.07.2022 அன்று நடைபெறும்.

6 மாணவர்களும், 6 மாணவிகளும் என 12 பேர் பெரம்பலூர் மாவட்ட சாம்பியன் என்ற பெருமையுடன் தமிழ்நாடு அரசின் விருந்தினராக மாமல்லபுரத்தில் 3 நாட்கள் தங்கி ஐந்து நட்சத்திர விடுதியில் நடைபெறும் சர்வதேச தரத்திலான இந்த போட்டியை நேரில் காணவும், கிராண்டமாஸ்டர்கள் உடன் விளையாடி செஸ் பயிற்சி பெறுவதற்கான வாய்ப்பை பெறுவார்கள்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!