Chief Minister Edappadi K. Palanisamy will visit Perambalur tomorrow on various government functions: Perambalur Collector Information

பெரம்பலூர் கலெக்டர் ஸ்ரீவெங்டபிரியா விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:

தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி மு.பழனிசாமி நாளை பிற்பகல் பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் ஆபீஸ் வளாகத்தில் ரூ.24.41 கோடி மதிப்பிலான 8 முடிவுற்ற பணிகளை திறந்து வைத்தும், ரூ.19.25 கோடி மதிப்பிலான 4 புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும், ரூ.23.58 கோடி மதிப்பில் 1,614 பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளையும் வழங்கி மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்டுள்ள பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகள் மற்றும் கொரோனா தடுப்பு பணிகள் குறித்து ஆய்வு அனைத்து துறை முதன்மை அலுவலர்களுடன் ஆய்வு செய்யவும், அதன் பின்னர், குறு, சிறு நடுத்தரத் தொழில் கூட்டமைப்பு நிர்வாகிகள், விவசாய சங்க பிரதிநிதிகள் மற்றும் மகளிர் சுய உதவிக் குழுவினர்களுடன் கலந்தாய்வு மேற்கொள்கிறார்.

பெரம்பலூர் மாவட்டத்தில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை, மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்பநலத்துறை, கால்நடை பராமரிப்புத்துறை மற்றும் சுற்றுலாத்துறை ஆகிய துறைகளின் சார;பில் ரூ.24.41 கோடி மதிப்பிலான 8 முடிவுற்ற திட்டப்பணிகளையும், பொதுப்பணித்துறை – நீர்வள ஆதாரத்துறை, கால்நடை பராமரிப்புத்துறை, ஆகிய துறைகளின் சார்பாக ரூ.19.25 கோடி மதிப்பிலான 4 புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டவும், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறையின் மூலம் 943 பயனாளிகளுக்கும், ஊரக வளர்ச்சி (ம) உள்ளளாட்சித் துறையின் மூலம் 291 பயனாளிகளுக்கும், வேளாண்மைத்துறையின் மூலம் 31 பயனாளிகளுக்கும், கூட்டுறவுத் துறையின் மூலம் 6 பயனாளிகளுக்கும், மாற்றுத் திறனாளிகள் நலத் துறையின் மூலம் 74 பயனாளிகளுக்கும், தமிழ்நாடு ஆதிதராவிடர் வீட்டு வசதி மேம்பாட்டு கழகத்தின் சார்பில் 27 பயனாளிகளுக்கும், குறு சிறு நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறையின் மூலம் 8 பயனாளிகளுக்கும், கால்நடை பராமரிப்புத் துறையின் மூலம் 200 பயனாளிகளுக்கும், சமூகநலத் துறையின் மூலம் 28 பயனாளிகளுக்கும், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத் துறையின் மூலம் 6 பயனாளிகளுக்கும், என மொத்தம 1,614 பயனாளிகளுக்கு ரூ.23.58 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளையும் வழங்க உள்ளார், என அவர் தெரிவித்துள்ளார்.

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2025 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!